ஆத்திரேலியக் கூட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆத்திரேலியக் கூட்டமைப்பு (Federation of Australia) என்பது பிரித்தானியாவின் ஆறு தனியான குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஆகும். 1901 சனவரி 1 இல் நடுவண் அரசமைப்பு அமுலானபோது இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பொதுநலவாய ஆஸ்திரேலியாவின் மாநிலங்களாயின.

1850கள், 1860களிலேயே கூட்டமைப்பு உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், பொதுவான ஆதரவின்மை காரணமாக முயற்சி கைகூடவில்லை. 1890களில் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் பல கூட்டங்களும், மக்கள் வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. நியூ சவுத் வேல்சின் முதல்வர் சேர் ஹென்றி பார்க்ஸ் இம்முயற்சிகளில் முன்னின்று உழைத்தார். இம்முயற்சியில் பிஜி, நியூசிலாந்து ஆகியனவும் ஆரம்பத்தில் இணைந்திருந்தனவாயினும், அவை பின்னர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள மறுத்து விட்டன.[1]

1901 இல் சேர் எட்மண்ட் பார்ட்டன் ஆஸ்திரேலியாவின் தற்காலிக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அதே ஆண்டில் இடம்பெற்ற முதலாவது நடுவண் அரசுத் தேர்தலில் இவர் நிரந்தரமாக்கப்பட்டார்.

Remove ads

நடுவண் அரசியலமைப்பு

Thumb
கூட்டமைப்பைக் கொண்டாடும் முகமாக நிறுவப்பட்ட வளைவு, குடிமக்களின் வளைவு, தேசிய அருங்காட்சியகம், கான்பரா
Thumb
ரோயல் அருங்காட்சியகம், மெல்பேர்ண் நகரில் முதலாவது நாடாளுமன்றக் கட்டிடம்.

பொதுநலவாய ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் (ஐக்கிய இராச்சியம்) ஜூலை 5 1900 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு ஜூலை 9, 1900 ஆம் ஆண்டில் அன்றைய விக்டோரியா மகாராணியினால் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1901 சனவரி 1 இல் சிட்னியில் நூற்றாண்டுப் பூங்காவில் பொதுநலவாய ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சேர் எட்மண்ட் பார்ட்டன் கூட்டமைப்பின் இடைக்காலப் பிரதமராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 9 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் இரு அவைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. அரசியின் பிரதிநிதியாக பொது ஆளுநர் நியமிக்கப்பட்டார். அத்துடன் உயர் நீதிமன்றம் ஒன்றும் புதிய அரசியலமைப்பின் படி நிறுவப்பட்டு, மாநிலங்களுக்கும், புதிய நடுவண் பொதுநலவாய அரசுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வுகள் இடம்பெற்றன.

கூட்டமைப்பின் தலைநகரைத் தேர்ந்தெடுப்பதில் சிட்னிக்கும், மெல்பேர்ணிற்கும் இடையில் கடும் போட்டி இருந்து வந்தது. இதனால் இரண்டையும் தவிர்த்து தனியானதொரு பிரதேசம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்குள் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் கான்பரா என்ற புதிய தலைநகர் அமைக்கப்படும் வரையில் மெல்பேர்ண் இடைக்காலத் தலைநகராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் கூட்டமைப்பு இன்றும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு பாடசாலைகளில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads