ஆத்திரேலியப் பசுமைக் கட்சி

From Wikipedia, the free encyclopedia

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி
Remove ads

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி (Australian Greens) எனப்படுவது ஆத்திரேலியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சூழலியத்துடன் இக்கட்சி பின்வரும் நான்கு அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது: பேண்தகுநிலை, சமூகநீதி, அடிமட்ட சனநாயகம், அமைதியும் வன்முறையின்மையும்[1]

விரைவான உண்மைகள் ஆத்திரேலியப் பசுமைக் கட்சி The Australian Greens, தலைவர் ...

ஆத்திரேலிய சுற்றுச்சூழல் இயக்கம், ஐக்கிய தாசுமேனியக் குழு போன்ற இயக்கங்கள் இக்கட்சியின் முன்னோடிகள் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய தாசுமேனியக் குழு உலகின் முதல் பசுமைக் கட்சிகளில் ஒன்றாகும்,[2] அத்துடன் மேற்கு ஆத்திரேலியாவின் அணுவாயுதக் குறைப்பு இயக்கம், நியூ சவுத் வேல்சின் தொழிலாளர் இடதுசாரிகள் போன்றவையின் பசுமைக் கட்சியின் முன்னோடிகள் ஆகும். ஐக்கிய தாசுமேனியக் குழு 1972 இல் தாசுமேனிய மாநிலத் தேர்தல்களில் பங்குபற்றியது.

மேற்கு ஆத்திரேலியாவின் பசுமைக் கட்சியின் ஜோ வலண்டைன் என்பவர் 1990 ஆம் ஆண்டில் முதலாவது செனட் இருக்கையைப் பெற்றுக் கொண்டது. பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவர் பாப் பிரவுண் 1996 ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் பசுமைக் கட்சியினர் செனட் அவையில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் தற்போது ஒன்பது மேலவை உறுப்பினர்களும், கீழவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர். மாநில நாடாளுமன்றங்களில் 24 உறுப்பினர்களும், உள்ளூராட்சிகளில் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளனர்.[3] 10,000 இற்கும் அதிகமானோர் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads