ஆன்மா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஓர் உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.[1]

Remove ads

தத்துவ கருத்துக்கள்

பண்டைய கிரேக்கர்கள் "alive" என்ற வார்த்தைக்கு "உயிருடன்" என்ற வார்த்தையைப் பொருளாக (அர்த்தமாக) பயன்படுத்தினர், ஆரம்பத்தில் எஞ்சியிருந்த மேற்கத்திய தத்துவ பார்வையானது, ஆன்மா உடலின் வாழ்க்கைக்கு வழங்கியதாக நம்பப்பட்டது என்பதைக் குறிக்கிறது. ஆத்மாவானது உடல் வடிவம் இல்லாத உயிராக அல்லது ஆன்மீக "மூச்சு" என்று கருதப்பட்டது. பிரான்சிஸ் எம். கார்ன்ஃபோர்ட், பிந்தர் மேற்கோளிட்டு, மூட்டுகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது ஆன்மா தூங்குகிறது என்று கூறுகிறார், ஆனால் ஒருவர் தூங்கும்போது, ஆன்மா சுறுசுறுப்பாகவும், கனவுகளில் "மகிழ்ச்சியோ அல்லது துக்கத்தோடும் அருகாமையில்" வெளிப்படுத்துகிறது. [2]

எர்வின் ரோஹ்ட் எழுதியது, ஆரம்பகால பித்தகோரையன் நம்பிக்கையின் படி உடலை விட்டு வெளியேறும் போது ஆன்மா உயிரற்றது, அது உடலுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை இல்லாதால் ஹேடீஸ் எனும் கிரேக்க கடவுளுக்குள் விடைபெறுகிறது என்று எழுதியுள்ளார்.[3]

Remove ads

அரிஸ்டாட்டில்

Thumb
அரிஸ்டாட்டில் கூற்றுப்படி தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனிதர்களில் ஆன்மாவின் அமைப்பு

அரிஸ்டாட்டில் (384 கி.மு. - 322 கி.மு.) இயற்கையாக ஒழுங்கமைக்கப்பட்ட உடலின் "முதல் இயல்புநிலை" ஆன்மா அல்லது பஷு (ψυχή) என வரையறுக்ககிறார்.[4] மேலும் இது உடலினின்றும் தனித்து இருத்தல் என்ற கருத்தை எதிர்க்கிறார். அரிஸ்டாட்டிலின் பார்வையில், உயிரினத்தின் முதன்மை செயல்பாடு அல்லது முழுமையான தன்மை அதன் ஆன்மாவாக அமைகிறது.[5] உதாரணமாக ஒரு கண்ணின் முழு உண்மைத்தன்மை அதன் தனித்துவமான பார்த்தல் திறன் ஆகும். ( இதுவே அதன் நோக்கம் அல்லது இறுதி காரணம்) . மற்றொரு உதாரணம், ஒரு மனிதனின் முழு இயல்புத்தன்மையும் காரணத்துடன் ஒரு முழுமையான செயல்பாட்டு வாழ்வினைக் கொண்டதாகும். (மனிதாபிமானம் என்ற தனித்துவம் மனிதனில் கானப்படுதல்)[6] அரிஸ்டாட்டில் கருத்துப்படி ஆத்மா என்பது ஒரு முழுமையான இயல்பின் வடிவம் மற்றும் பொருளின் அமைப்பாகும், இது அதன் முழுமையான செயல்பாட்டிற்காக போராடுவதற்கு அனுமதிக்கிறது. எந்தவொரு இயற்கை உயிர்களின் செயல்பாட்டிற்கும் வடிவம் மற்றும் விபரம் இடையிலான அமைப்பு அவசியம். உதாரணமாக இல்லம் என்பது மனிதர்களின் குடியிருக்கும் விட்டினைக் குறித்தாலும் அதனை அமைக்க செந்கல், மரம் போன்ற பொருட்களின் பங்கும் இன்றியமையாததாகிறது.[7] இயல்பான மனிதர்களில், இயல்பின் இந்த ஆதாரம் தன்னளவில் இருப்பது. அவர் ஆன்மாவின் திறன்களை உரையாற்றும்போது அரிஸ்டாட்டில் இந்தப் புள்ளியை விளக்குகிறார்.

ஆன்மாவின் புலங்கள்

ஆன்மாவின் புலங்களாக, ஊட்டச்சத்து, இயக்கம் (விலங்குகளில் முதன்மையானது), காரண காரியமறிதல் (மனிதப் பண்புகள்), உணர்தல் (சிறப்பு, பொது மற்றும் எதேச்சையான) மற்றும் முன்னர் பயன்படுத்தும் போது ​​உயிருடன் இருக்கும் தன்மை "இரண்டாவது" இயல்மையை கட்டமைக்கும் திறனாகும். உதாரணமாக தூங்கிக் கொண்டிருப்பரை நம்மால் எழுப்ப முடியும். ஆனால் இறந்த ஒரு சடலத்தை எழுப்ப இயலாது.

கி.பி 350 ல் எழுதப்பட்ட டி அனிமா (ஆன்மாவின் மீது) என்ற ஆரிஸ்டாட்டிலின் புத்தகத்தில் ஆன்மா பற்றிய கலந்துரையாடல் காணப்படுகிறது.[8] ஆத்மாவின் அழியாமையைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பிளாட்டோவின் கருத்துகளுக்கு மாறுபட்டதாக மூன்றாவது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரு சர்ச்சை காணப்படுகிறது. இந்த உரையில் இரண்டு விளக்கங்களும் வாதிடலாம், ஆன்மா மொத்தமாக மனிதனாக கருதப்படலாம் மற்றும் "செயலில் அறிவாற்றல்" அல்லது "செயலில் உள்ள மனப்பான்மை" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி அழிவற்ற மற்றும் நித்தியமானது என்று கூறப்பட்டுள்ளது.[9] சர்ச்சையின் இரு பக்கங்களிலும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இறுதி முடிவுகளைப் பற்றி நிரந்தர கருத்து வேறுபாடு இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது, ஏனெனில் வேறு எந்த அரிஸ்டாட்டில் உரை இந்த குறிப்பிட்ட புள்ளியைக் கொண்டிருக்கவில்லை என்ற டி அனிமாவின் இந்த பகுதி தெளிவற்றது.[10]

Remove ads

மதப் பார்வைகள்

புத்த மதம்

புவியிலுள்ள அனைத்தும் ஒரு தொடர்ச்சியான மாறிலிகளாக எவற்றுக்கும் நிரந்தர நிலை இல்லாத தன்மையை வலியுறுத்தி புத்தமதம் போதிக்கிறது.[11][12] இது பிரபஞ்சத்தில் வேறு எதனையும் விட மனிதர்களுக்கு பொருந்தும். இவ்வாறு, மனிதனுக்கு நிரந்தரமான சுயவிவரம் இல்லை அனத்தா உடன்படிக்கையின்படி [13][14] (பாலி, சமஸ்கிருதம்: அனாத்மம்) இந்த கோட்பாட்டின் படி - "சுயமில்லாத" அல்லது "ஆன்மா இல்லாத" - என்ற வார்த்தைகள் "நான்" அல்லது "என்னை" என்ற எந்த நிலையான விபரத்தையும் குறிப்பிடவில்லை.[15][16] அவை எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உட்பொருளைக் குறிப்பிடுவதற்கு அனுமதிக்கும் எளிதான வசதியான சொற்களாக அறியப்படுகிறது.[17]

அனத்தா கோட்பாடு ஒரு வகையான பொருள்முதல்வாதம் அல்ல.[18] புத்தமதம் "அத்தியாவசிய" உண்ம உரு இருப்பை மறுக்கவில்லை, அது (குறைந்தபட்சம் பாரம்பரியமாக) மனநிலை இருந்து பொருண்மை உடல்நிலைகளை வேறுபடுத்துகிறது.[19] ஆன்மா அல்லாத என்ற பொருள்படும் சமசுகிருதச் சொல்லான அனத்தா மொழிபெயர்ப்புகளின் போது குழப்பத்தைத் தரலாம். "ஆன்மா" என்ற வார்த்தை வெறுமனே மரணத்திற்குப் பின் தொடரும் உயிரினங்களில் ஒரு உறுதியான கூறுபாட்டைக் குறிப்பதால் புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுப்பது இல்லை.[20] பௌத்த போதனையானது ஒரு நிரந்தர, நித்தியமான சுயத்தின் ஒரு கருத்தாகும், அது உணர்ச்சி, சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் மனித முரண்பாட்டின் காரணங்களில் ஒன்றாகும்.[21][22] புத்த மதத்தில் ஆன்மா பற்றிய ஒரு புரிந்துணர்வு மனித நிலையை பற்றிய துல்லியமான விளக்கத்தை அளிக்கிறது, மேலும் இந்த புரிதல் இம்மை பற்றிய நம் விருப்பத்தை சமாதானப்படுத்த அனுமதிக்கிறது.[23]

இந்து மதத்தில் ஆன்மா

இந்து மதத்தில், சமஸ்கிருத வார்த்தைகள் மிகவும் நெருக்கமாக ஆன்மாவைக் குறிக்கின்றன, அவை ஜீவா, ஆத்மன் மற்றும் "புருஷா", அதாவது தனி நபரின் பொருள்.இந்து தத்துவத்தில், குறிப்பாக இந்து மதத்தின் வேதாந்தா பள்ளியில், ஆத்மா முதன்மையானது, தனி நபரின் சாராம்சத்தை அடையாளம் காணாமல் தனி நபரின் உண்மையான சுயம்.[24]

விடுதலை (மோட்சம்) அடைவதற்கு, ஒரு மனிதர் சுய அறிவை (ஆத்மா ஜானா) பெற வேண்டும்,அதாவது தனது உண்மையான சுய மனம் (அத்மா) பற்றி உணர வேண்டும்.அது ஆழ்ந்த அல்லது தலைசிறந்த சுயம் அறிந்த பிராமணனுடன் ஒத்ததாக இருக்கிறது.இந்து மதத்தின் ஆறு பழங்குடிப் பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆத்மா (ஆன்மா, சுய) இருப்பதாக நம்பபடுகின்றன, புத்தமதத்தோடு ஒப்பிடும் போது இதில் ஆன்மா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புத்த மதத்தில் ஆன்மா அல்லது சுயம் இருப்பதாக நம்பபடவில்லை.[25]

இந்து மதத்தின் அனைத்து முக்கிய மரபு சார்ந்த பள்ளிகளான - நியாயா, வைசேசிகா, சாம்க்யா, யோகா, மிமாம்சா, மற்றும் வேதாந்தாவிலும் (Nyaya, Vaisesika, Samkhya, Yoga, Mimamsa, and Vedanta) வேதங்கள் மற்றும் உபநிஷதங்களின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு "ஆத்மா என்பது உள்ளது" என்று ஏற்றுக் கொள்கிறது.ஜெயின் மதமும் கூட இந்து மதத்தின் இந்த அனுமானத்தை ஏற்றுக்கொள்கிறது, இருப்பினும் அது ஆத்மா என்னும் சொல்லிற்கு அதன் சொந்த யோசனையையும் கொண்டுள்ளது.இதற்கு மாறாக சாவகம் என அழைக்கப்படும் உலகாயதம் என்னும் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது.[26]

Remove ads

சைன மதம்

சைன மதத்தில் தாவரம் அல்லது பாக்டீரியம் முதல் மனிதன் வரையிலான ஒவ்வொரு உயிரினங்களும் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதுவே சைன மதத்தின் தத்துவமாகக் கொண்டு ஆன்மாவை (ஜீவன்) அதன் தற்போதைய நிலையில் இரு அடிப்படைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  • முக்திபெற்ற ஆன்மா -இவ்வகை ஆன்மாக்கள் முக்தி அல்லது மோட்சம் அடைந்த ஆன்மாக்களாகும். எனவே மீண்டும் வாழ்க்கை சுழற்சியின் அங்கமாக வருவதில்லை.[27]
  • முக்தி பெறா ஆன்மா- எந்தவொரு உயிரினத்தின் ஆன்மாவும் பின்வரும் 4 வடிவங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் பிணைக்கப்பட்டிருக்கும்
  1. மனுஷ்ய கதி (மனிதர்கள்) மனிதர்கள்
  2. தேவ கதி (வானியல்) மனிதர்கள்.
  3. திர்யஞ்ச கதி (விலங்கு) மனிதர்கள்.
  4. நரக்க கதி (நரக) மனிதர்கள்

இப்பொழுதுவரை ஆன்மாவானது சம்சாரா (திரும்ப நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி) விலிருந்து விடுவித்துக்கொள்ள வில்லை. அவை மேற்கண்ட பல்வேறு வகை உடலினுள் அவர்கள் செய்த கருமம் (செயல்கள்) அடிப்படையில் பிணைத்துக்கொள்கின்றன. சைன மதத்தின் கருத்துப்படி ஆன்மாவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை ஆகையால் அது இயற்கையில் நித்தியமானது மற்றும் விடுதலை (மோட்சம்) பெறும் வரை ஆன்மா தன் வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கும்.[28]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads