ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு
நடு ஆசியாவின் சனநாயக நாடு (1978–1992) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு[a] என்பது 1978 முதல் 1992 வரையிலான ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சியின் ஒரு கட்சி ஆட்சிமுறையின் போது இருந்த ஒரு ஆப்கான் அரசு ஆகும். இது 1987ஆம் ஆண்டு ஆப்கான் குடியரசு[b] என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரியான முகம்மது தாவூத் கானின் அரசை சௌர் புரட்சி மூலம் நீக்கிய பிறகு இக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 30 ஏப்ரல் 1978ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தலைவராக நூர் முகம்மது தராகி பதவியேற்றுக் கொண்டார்.[1] தராகி மற்றும் சௌர் புரட்சியின் அமைப்பாளரான அபிசுல்லா அமீன் ஆகியோர் தங்களது ஆட்சியின் போது பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். அதில் முக்கியமானவை நில மற்றும் திருமணச் சீர்திருத்தங்களாகும். இஸ்லாமிலிருந்து மாறும் தங்களது கொள்கைகளைச் செயல்படுத்தினார். சமூகவுடமையை ஆதரித்தனர்.[2] கானால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களான அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் பெண்களுக்கு சம உரிமை போன்ற சீர்திருத்தங்களை அமீன் விரிவுபடுத்தினார்.[3] அதிகாரத்திற்கு வந்தவுடன் தராகி மற்றும் அமீன் தலைமையிலான கல்க் பிரிவு மற்றும் பப்ரக் கர்மாலால் தலைமை தாங்கப்பட்ட பர்சம் பிரிவு ஆகியவற்றுக்கிடையே அதிகாரப் போட்டி தொடங்கியது. கல்க் பிரிவினர் இதில் வெற்றி பெற்றனர். பர்சம் பிரிவினரில் பெரும்பாலானோர் கட்சியிலிருந்து இறுதியாக ஒழித்துக் கட்டப்பட்டனர். மிக முக்கியமான பர்சம் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads