ஆப்பர்சூனிட்டி தளவுளவி

From Wikipedia, the free encyclopedia

ஆப்பர்சூனிட்டி தளவுளவி
Remove ads

ஆப்பர்சூனிட்டி (Opportunity, MER-B , Mars Exploration Rover – B), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (rover) இரண்டாவது ஆகும்.

விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...

இது ஜனவரி 25, 2004 இல் செவ்வாயில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) வெற்றிகரமாகத் தரையிறங்கியது. முதலாவாதக இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனவரி 4, 2004 இல் இசுபிரிட் தளவுளவி (MER-A, Mars Exploration Rover - A) என்ற தளவுளவி (rover) செவ்வாயில் 90மைல் அகண்ட கூஸிவ் குழியில்('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. ஆனால் இசுபிரிட் 2009 நகர முடியாமல் தடைபட்டுப்போனது . பின்னர் 2010 இல் முழுமையாக இதன் தொடர்பு நிறுத்தப்பட்டன. ஆனால் வெறும் 3 மாத காலத்திற்கு மட்டும் நாசாவால் திட்டமிடப்பட்டு அனுப்பி வைத்தத 'ஆப்பர்சூனிட்டி' இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளாக இது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தனது திட்டமிட்ட பயனத்தை விட 40 மடங்கு அதிக காலம் செயல்பட்டு வருகிறது. முதலில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரைக்குத்தான் ஆப்பர்சூனிட்டி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 38.7 கிலோமீட்டர் வரை நகர்ந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் படங்களையும் அது அனுப்பியுள்ளது.

இந்த திட்ட பணி ஆரம்ப 90 Sol காலத்தில், மெரிடியானி பீடத்தில் உள்ள செவ்வாய் கிரத்திற்கு தொடர்பில்லாத வின்கற்களை பற்றி அறிவது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்டோரியா க்ரேட்டர் (Victoria Crater) பற்றி அறிய இது பயன்படுத்தப்படுகிறது. இது தூசி புயல்களில் தப்பிப்பிழைத்து எண்டோவர் பள்ளத்தை 2011 இல் அடைந்தது. இதை இதன் இரண்டாவது இறங்கும் தளம் என விவரிக்கின்றனர்.

Remove ads

செவ்வாய் கோள் கண்டறிதல் தளவுளவியின் அறிவியல் இலக்குகள்

  • பாறைகள் மற்றும் மண்ணின் பல்வேறு குணாதிசயத்தைக் கொண்டு செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறிதல். மழை, ஆவியாதல், வண்டல் இயல்பு அல்லது நீர்வெப்ப நடவடிக்கை ஆகியவைகளைக் கொண்டு தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டறிய முற்படும்.
  • இறங்கும் தளங்களை சுற்றியுள்ள உலோகங்கள், பாறைகள், மற்றும் கனிமங்கள் ஆகியவைப் பற்றி அறிதல்.
  • தண்ணீர் அல்லது காற்று அரிப்பு, வண்டல், நீர்வெப்ப வழிமுறைகள், எரிமலைகள் மற்றும் மோதல்களால், நில அமைப்பு உருவான செயல்முறைகள் பற்றி அறிவது.
  • பாறைகள், மண்ணின் கட்டமைப்பு மற்றும் குணாதிசயத்தைக் கொண்டு அவைகள் உருவாகிய செயல்முறைகளைத் தீர்மானிப்பது.
  • உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது இதன் முக்கியப் பணி.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads