ஆம்பியர்

மின்னோட்ட அலகு From Wikipedia, the free encyclopedia

ஆம்பியர்
Remove ads

ஆம்பியர் (குறியீடு: A) [1][2] என்பது மின்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் (SI) அடிப்படை அலகு ஆகும்.[3][4] மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன.

விரைவான உண்மைகள் ஆம்பியர், பொது தகவல் ...

ஒரு விநாடியில் பாயும் ஒரு கூலோம் (6.241 × 1018 எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு ஆம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும். (1775–1836) ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த பிரெஞ்சு இயற்பியலாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பெயரால் இவ்வலகு அழைக்கப்படுகிறது. இவர் மின்னியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆம்பியருக்கான ஒரு விளக்கமாகும்.

ஓம் விதியின்படி , ஒரு மின்சுற்றில் மின்தடையானது, மின் இயக்க விசைக்கு நேர்விகித்திலும் அதில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கிறது.அதாவது R = V/I க்குச் சமம்.அல்லது

I=V/R ஆகும்.

இதிலிருந்து, ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில் பாயும் மன்னோட்டம் ஒரு ஆம்பியருக்குச் சமம் ஆகும்.

Remove ads

வரையறை

Thumb
ஆம்பியர் அலகை விளக்கும் படம்

அனைத்துலக அலகு முறையில் ஆம்பியர் என்பது கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது:

ஒரு ஆம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி இணையாகச் செல்லும் நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10-7நியூட்டன் எனும் விசையை ஒரு மீட்டர் நீளத்தில் தோற்றுவிக்கும், மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இதில் கம்பிகளின் குறுக்களவு விட்டு விடத்தக்கதாகக் கொள்ளப்படுகிறது.[3][5][6]

ஆம்பியரின் விசை விதியின் படி[7][8] மின்னோட்டம் பாயும் இரு இணை கம்பிகளுக்கிடையே ஒரு ஈர்க்கும் அல்லது விலக்கும் விசை உள்ளது. இந்த விசையின் அளவே ஆம்பியரை அளக்க பயன்படுகிறது.

அனைத்துலக அலகு முறையில் மின்மத்தை அளக்கும் கூலும் என்பது "ஒரு விநாடி நேரத்தில், ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதால் உண்டாவதாகும்"[9]

எதிரிடையாக, ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது ஒரு விநாடி நேரத்தில், ஒரு கூலும் மின்மத்தால் உருவாகிறது.

பொதுவாக, I என்ற மாறாத மின்னோட்டம், t என்ற நேரத்தில் பாயும் போது உண்டாகும் Q மின்மத்தை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் காணலாம்: Q = It.

Remove ads

வரலாறு

ஆம்பியர் என்பது சென்டி மீட்டர்-கிராம்-விநாடி அலகு முறையிலுள்ள மின்னோட்ட அளவில் பத்தில் ஒரு பங்காக முதலில் வரையறுக்கப்பட்டது. அது இப்போது ஆப்ஆம்பியர் (abampere) என அழைக்கப்படுகிறது. இது ஒரு சென்டி மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டுள்ள ஒரு சென்டி மீட்டர் நீளமுள்ள இரு கம்பிகளுக்கிடையே இரண்டு டைன் விசையை உண்டாக்கும் மின்னோட்டத்தின் அளவாகும்.[10]

சர்வ தேச ஆம்பியர் என்பது தற்போதுள்ள ஆம்பியர் அலகின் முன்பு வரையறுக்கப்பட்டது. இது வெள்ளி நைட்ரேட் கரைசலில் 0.001118 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யும் மின்னோட்டத்தின் அளவாகும்.[11] பின்னர் செய்யப்பட்ட துல்லியமான செயல் முறைகளின் படி, மின்னோட்டத்தின் அளவு 0.99985 A எனக் கண்டறியப்பட்டது.

வலு என்பது மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கல் தொகைக்குச் சமம். அதனால் ஒரு ஆம்பியர் என்பதை ஒரு வாட்டு வலு / ஒரு வோல்ட் மின்னழுத்தம் எனவும் கணக்கிடலாம்.

Remove ads

முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால வரையறை

இரு மின்னோட்டம் பாயும் கம்பிகளுக்கிடையேயுள்ள விசையின் அளவை விட, ஆம்பியரை அடிப்படை மின்மங்கள் பாயும் வீதத்தைக் கொண்டு கணக்கிடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.[8] ஒரு கூலும்மின் தோராயமான மதிப்பு 6.2415093×1018 எண்ணிக்கையிலான அடிப்படை மின்மங்களுக்குச் சமம். (நேர்மின்னிகளாலான நேர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது மற்றும் எதிர்மின்னிகளாலான எதிர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது ஆகியவை சேர்த்து அடிப்படை மின்மங்களாகக் கொள்ளப்படுகின்றன.)

ஒரு ஆம்பியர் என்பது தேராயமாக 6.2415093×1018 எண்ணிக்கையிலான அடிப்படை மின்மங்கள், ஒரு நொடியில் பாயும் வீதத்திற்குச் சமம். (6.2415093×1018 என்ற மதிப்பின் தலைகீழி அடிப்படை மின்மங்களின் அளவு கூலும்மில் அளக்கப்படுகிறது..[12]

முன்மொழியப்பட்ட மாற்றமாக 1 A என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அடிப்படை மின்னூட்டங்கள், ஒரு விநாடியில் பாயும் வீதத்தைக் கொண்டு ஒரு ஆம்பியர் என்பது கணக்கிடப்படுகிறது. எடைகள் மற்றும் அளவுகளுக்கான சர்வதேச செயற்குழு 2005 ஆம் ஆண்டு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads