ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் (Aaralvaimozhi esakki amman koil) இந்திய நாட்டின் தமிழ்நாட்டிலுள்ள முப்பந்தல் என்னும் ஊரில்அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு இசக்கியம்மன் முப்பந்தல் கோவில், அமைவிடம் ...
Remove ads

முப்பந்தல்

கன்னியாகுமாி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகா்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டா் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் முப்பந்தல் உள்ளது.[2] சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் இவ்விடத்தில் மூவேந்தரும் ஒன்று கூடி பந்தலமைத்து ஒளவைப்பிராட்டிக்கு விழா எடுத்ததாகவும் இதன் அடிப்படையிலேயே இந்த இடம் "முப்பந்தல்" என்னும் பெயர் பெற்றதாகவும் இவ்வூர் மக்களால் கூறப்படும் செவிவழிச் செய்தியாகும்.

Remove ads

கோயில் அமைப்பு

இக்கோயிலில் இசக்கியம்மன் சன்னதியும், ஔவையார், விநாயகர், முருகன், சுடலைமாடன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

முப்பந்தலில் கருவரை அம்மன் வடக்குப் பார்த்து காட்சி தருகிறாள். கருவறை சுற்றுச் சுவறில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம்புாி விநாயகரும் பால முருகனும் ஒளவையாருக்கு ஒளவையாரம்மன் என்ற பெயாில் தனி சன்னதியும் உள்ளது. முகப்பில் காவல் தெய்வங்களான சுடலை மாட சுவாமியும், பட்டவராயரும் தனி சன்னதியில் உள்ளனர்.

Remove ads

தலவரலாறு

முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள். அவள் கர்ப்பத்திற்கு அவனே காரணம் என்பதை ஊர் நம்ப மறுத்து விட்டது. எனக்கும் என் குழந்தைக்கும் நியாயம் கிடைக்காததால் இவ்வூாில் எவருக்கும் கர்ப்பம் தாிக்காது போகட்டும் என்று சாபமிட்டு அவ்விடம் விட்டு நீங்கிச் சென்று குழந்தையோடு தற்கொலை செய்து கொண்டார். அவள் சாபமிட்டுச் சென்ற அடுத்த கணம் பஞ்சாயத்து நடந்த இடத்தின் ஆலமரக்கிளை ஒடிந்து விழுந்து ஊர் பொியவர்கள் முதல் இசக்கியை ஏமாற்றிய கயவன் வரை அனைவரும் மாண்டு போனார்கள்.

சாபத்திற்கு ஆளானதால் அவ்வூர் மக்கள் புத்திர பாக்கியமின்றி தவித்தனர். இந்நிலையில் ஒரு நாள் முப்பந்தல் அருகே ஒரு பெண் அலறுவது போல் ஒரு சத்தத்தைக் கேட்டனர். எல்லோரும் சென்று பார்த்த போது சுயம்புவாய் ஒரு அம்மன் உருவம் தென்பட்டது. ஊரைக் காக்கவே தான் வந்துள்ளதாகவும். இசக்கிக்கு துரோகம் செய்ததால் அந்நிலை வந்ததாகவும் அசரீரி ஒலித்தது. இதனால் இசக்கியின் நினைவாக இவ்வம்மனுக்கு இசக்கியம்மன் என்ற திருநாமம் சூட்டி ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.[4]

ஆடித்திருவிழா

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆடிமாதம் கடைசி செவ்வாய்க் கிழமை மிகப்பொிய திருவிழா நடைபெற்று வருகிறது. தைமாதத்தில் அம்மனுக்கு மலர் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads