ஆரிப் முகமது கான்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஆரிப் முகமது கான்
Remove ads

ஆரிப் முகமது கான் (Arif Mohammad Khan) (பிறப்பு: 18 நவம்பர், 1951) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]

விரைவான உண்மைகள் ஆரிப் முகமது கான், 22வது கேரள ஆளுநர் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

ஆரிப் முகமது கான் 18 நவம்பர் 1951 அன்று புலந்த்சரில் பிறந்தார். டெல்லியின் ஜாமியா மில்லியா பள்ளியில் பள்ளிக் கல்வியும் அலிகர் இசுலாமிய பல்கலைக்கழகம், மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் சினா கல்லூரியில் கல்வி பயின்றார் பட்டப் படிப்பை முடித்தார்.[3]

Thumb

அரசியல் வாழ்க்கை

கான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், 1980 ஆம் ஆண்டு கான்பூர் தொகுதியிலிருந்தும் 1984 ஆம் ஆண்டு பக்ரைச் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . கருத்து வேறுபாடுகள் காரணமாக 1986 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகினார்.

கான் ஜனதா தளத்தில் சேர்ந்தார், 1989 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தள ஆட்சியின் போது கான் மத்திய சிவில் விமான மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

Remove ads

கேரள ஆளுநர் (2019 - தற்போது வரை)

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உத்தரவின் பேரில் கான் 1 செப்டம்பர் 2019 அன்று கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4][5]

மேலதிகத் தகவல்கள் இந்திய மக்களவை, அரசியல் பதவிகள் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads