ஆர். நந்தகோபால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். நந்தகோபால் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி எனும் புனைப் பெயர்களில் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீகத் துணுக்குகள் போன்றவைகளை எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெளியான படைப்புகள்
தமிழில் வெளியான அச்சு இதழ்களில் இவருடைய படைப்புகள் நகைச்சுவைத் துணுக்குகள்-1150, சிறுகதைகள்-210 (50% நகைச்சுவைக் கதைகள்), பொதுக் கட்டுரைகள்-12, ஆன்மீகக் கட்டுரைகள்-12 , கவிதைகள்-35 வெளியாகி இருக்கின்றன.
வெளியான இதழ்கள்
தினத்தந்தி, தினமலர், மாலை முரசு, மாலை மலர், காலைக்கதிர், தினகரன், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ஜங்க்ஷன், ஆனந்த விகடன், கல்கி, தேவி, ராணி, பாக்யா, தினத்தந்தி-குடும்பமலர், தினமலர்-வாரமலர், காலைக்கதிர்-வாரக்கதிர், தினகரன் -வசந்தம், தினகரன் அருள் ஆகிய வார இதழ்களிலும், மங்கை, மங்கையர் மலர், கோகுலம் கதிர், பெண்மணி, தங்கமங்கை, அமுதசுரபி ஆகிய மாத இதழ்களிலும், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த், குமுதம் பக்தி ஸ்பெஷல், தேவியின் கண்மணி ஆகிய மாதமிருமுறை இதழ்களிலும், மேலும் தமிழில் வெளியாகி நின்று போன பல முன்னனி இதழ்களிலும் , சில சிற்றிதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.
தற்போது இணையத்தில் வெளி வரும் இணைய இதழ்களில் திண்ணை, கீற்று, அதிகாலை, முத்துக்கமலம், அந்திமழை, இதயநிலா, தமிழோவியம், நிலாச்சாரல், அப்புசாமி, தமிழ்ச்சிகரம், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.
Remove ads
இலக்கிய அமைப்புகளின் பொறுப்புகள்
1. செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம், திருச்சி மாவட்டக் கிளை. 2. செய்தித் தொடர்பாளர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம். 3. ஆசிரியர், தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் "மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ் 4. ஆசிரியர் குழு உறுப்பினர், தாழம்பூ இதழ்.
வலைத்தளங்கள்
கிரிஜாமணாளன் சில நகைச்சுவை வலைத்தளங்களையும், சில கவிதை வலைத்தளங்களையும் துவக்கி நடத்தி வருகிறார்.
நகைச்சுவைத் தளங்கள்
1. கிரிஜாமணாளன் - நகைச்சுவை 2. கிரிஜானந்தா-நகைச்சுவை 3. நகைச்சுவை-தோட்டம்
கவிதைத் தளங்கள்
1. குறுந்தகவல் கவிஞர்கள் உலகம் 2. கவிதைகள் 3. திருச்சி கவிஞர்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads