ஆர். பாலச்சந்திரன்

பேராசிரியர், கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

ஆர். பாலச்சந்திரன்
Remove ads

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன் (சனவரி 13, 1946 - செப்டம்பர் 22, 2009, அகவை 63), கல்வியாளர், விமரிசகர், கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; சாகித்திய அகாதெமியின் நிர்வாக் குழு உறுப்பினராக இருந்தார். தமிழ் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராகவும் திகழ்ந்தார். "வானம்பாடி" என்ற தமிழ்ப் புதுக்கவிதைக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர். சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு அவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும்.

விரைவான உண்மைகள் ராமதாஸ் பாலச்சந்திரன், பிறப்பு ...
Remove ads

எழுத்துத் துறையில்

கவிதை நூல்கள்

  • இன்னொரு மனிதர்கள்
  • திண்ணைகளும் வரவேற்பறைகளும்
  • நினைவில் தப்பிய முகம்

உரைநடை நூல்கள்

  • சர்ரியலிசம்
  • சிற்பியின் கவிதை வானம்
  • கவிதைப் பக்கம்
  • தமிழ் இலக்கிய விமர்சகர்கள்; 1979; சுவடு பதிப்பகம்
  • முன்னுரையும் பின்னுரையும்
  • புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை
  • பாரதி - தத்துவம் கலை இலக்கியம் மொழி
  • பாரதியும் கீட்சும்
  • Tamil Modern Poetry Bharathidasan and After
  • Literature and Society

கவிஞர்கள் மீரா, மு. மேத்தா, ராஜம் கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர சிறு பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார்.

Remove ads

மறைவு

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பயனின்றி, 2009, செப்.22 மாலை 4 மணிக்கு காலமானார். பாலாவுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் பிரியா என்ற மகளும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்[1].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads