ஆர். பிரேமதாச அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்குகளில் ஒன்றாகும்.
Remove ads
முன் வரலாறு
35,000 பேருக்கு இருக்கைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads