ஆர். மகாதேவன்

From Wikipedia, the free encyclopedia

ஆர். மகாதேவன்
Remove ads

தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஆர். மகாதேவன்(தேவன்), பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

Remove ads

பத்திரிகாசிரியர்

சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.

எழுத்துலகில்

துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.

தேவனின் படைப்புகள்

புதினங்கள்

  • மைதிலி (1939)மைதிலி
  • மாலதி (1942 ) மாலதி
  • கோமதியின் காதலன் கோமதியின் காதலன்
  • துப்பறியும் சாம்பு (1942)
  • கல்யாணி (1944)
  • மிஸ் ஜானகிமிஸ் ஜானகி
  • ஸ்ரீமான் சுதர்ஸனம்'ஸ்ரீமான் சுதர்ஸனம்'
  • மிஸ்டர் வேதாந்தம் மிஸ்டர் வேதாந்தம் (1949-50)
  • ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
  • லட்சுமி கடாட்சம் (1951-5 2) லட்சுமி கடாட்சம்
  • ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)

பயணக் கட்டுரைகள்

  • நடந்தது நடந்தபடியே
  • ஐந்து நாடுகளில் அறுபது நாள்

கட்டுரை, கதைத் தொடர்கள்

  • மிஸ்டர் ராஜாமணி
  • விச்சுவுக்குக் கடிதங்கள்
  • அப்பளக் கச்சேரி
  • பெயர்போன புளுகுகள்
  • ராஜத்தின் மனோரதம்
  • கமலம் சொல்கிறாள்
  • ஸரஸுவுக்குக் கடிதங்கள்
  • பல்லிசாமியின் துப்பு
  • போக்கிரி மாமா
  • போடாத தபால்
  • அதிசயத் தம்பதிகள்
  • கண்ணன் கட்டுரைகள்
  • ராஜியின் பிள்ளை
  • மல்லாரி ராவ் கதைகள்
  • சின்னஞ் சிறுகதைகள்
  • பிரபுவே! உத்தரவு
  • புஷ்பக விஜயம்
  • ஜாங்கிரி சுந்தரம்

தொகுப்புகள், சிறுகதைகள்

  • ஏன் இந்த அசட்டுத்தனம்
  • பார்வதியின் சங்கல்பம்
  • சீனுப்பயல்
  • மனித சுபாவம்
  • பல்லிசாமியின் துப்பு
  • ஜாங்கிரி சுந்தரம்
  • போக்கிரி மாமா
  • ரங்கூன் பெரியப்பா
  • சொன்னபடி கேளுங்கள்
  • மோட்டார் அகராதி

அல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

Remove ads

தேவனைப் பற்றி பெரியோர்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads