ஆர். ராஜேந்திரன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். ராஜேந்திரன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் குறிஞ்சிப்பாடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் கடலூர் மாவட்டத்தின் சொரத்தூர் கிராமத்தில் பிறந்தவர். 1984 அவர் சொரத்தூர் ஊராட்சித் தலைவராக இருக்கிறார். இவர் 1989 ஆம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக ஆனார். அவர் தமிழ்நாடு கோவில்கள் சங்கத்தின் தலைவராகவும் பண்ருட்டி ஒன்றியப் பெருந்தலைவராகவும் 2000 முதல் 2003 வரை இருந்துள்ளார். இவர் அதிமுகவின் கடலூர் மாவட்டச் செயலாளராக 2001 ஆம் ஆண்டு முதல் 2007 வரை இருந்தார். 2010 ஆம் ஆண்டு அவர் எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணைச் செயலாளராக இருந்தார். இவர் அ இ அ தி மு க வில் பிரபலமான அரசியல்வாதி ஆவார். பொதுவாக அவர் தனது ஆதரவாளர்களாலும் கட்சியினராலும் சொரத்தூரார் அல்லது சொரத்தூர் சிங்கம் என அழைக்கப்படுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads