ஆலத்தூர் சகோதரர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலத்தூர் சகோதரர்கள் ஸ்ரீனிவாச ஐயர் ( 1912 - 1980 ) மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் ( 1916 - 1964 ) ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் இவர்கள் பயிற்சி பெற்றனர். ஆலத்தூர் சகோதரர்கள், உடன்பிறந்த சகோதரர்கள் அல்லர்.[1]

இவர்கள் தமது முதல் இசை நிகழ்ச்சியை 1928 ஆம் ஆண்டு, திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழாவில் வழங்கினார்கள். தமிழ் பாடலான 'சிவனை நினைந்தவர்...' (கவிகுஞ்சர பாரதி எழுதியது) எனும் பாடல் இச்சகோதரர்களின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இடம்பெறும். தமிழ் பாடல் திரட்டாகிய திருப்புகழை எல்லா மேடைகளிலும் இவர்கள் பாடினர்.[2][3]

1944 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை திருவாங்கூர் மகாராஜாவின் அரசவை இசைக் கலைஞர்களாக இவ்விருவரும் இருந்தார்கள்.

Remove ads

விருதுகள்

(சிவசுப்ரமணிய ஐயருக்கு 1964ஆம் ஆண்டும், ஸ்ரீனிவாச ஐயருக்கு 1965ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது.)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads