ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

From Wikipedia, the free encyclopedia

ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
Remove ads

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (பிறப்பு: ஜூன் 1, 1942 இறப்பு: அக்டோபர் 4, 2019) தமிழகக் கவிஞர். இவர் சென்னை ஆலந்தூரில் பிறந்தார். இவரின் தந்தை ம. கோபால் மற்றும் தாயார் கோ. மீனாம்பாள் ஆவார்கள்.

Thumb
தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன் கவிஞர் என்ற முறையில் தமிழ் உலகுக்கு அறிமுகமானவர். மரபுக் கவிதைகள் [1] கவிதை நாடகம் [2] நாவல் [3] சிறுகதைகள் [4] எனப் பல்வேறு கோணங்களில் நூல்கள் எழுதியுள்ளார்.

காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.

‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில் இவர் மு. வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.

எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார்.

Thumb

நூலகத்தால் உயர்ந்தேன் என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இவர் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார். [5]

Remove ads

மறைவு

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 2019 அக்டோபர் 4ஆம் நாள் அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார். [6]

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads