ஆலிசு மன்றோ

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலிசு ஆன் மன்றோ (Alice Ann Munro, 10 சூலை 1931 – 13 மே 2024) என்பவர் ஓர் கனடிய எழுத்தாளர். இவர் 2013ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், 2009ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பன்னாட்டுப் பரிசையும் தனது படைப்புகளுக்காக வென்றவர். இவர் மும்முறை கனடாவின் புனைகதைக்கான ஆளுநர் விருதினை (Governor General's Award) வென்றுள்ளார்.[1][2] இவர் தனது படைப்புகளில் தென்மேற்கு ஒன்ராறியோவிலேயே அதிகம் மையப்படுத்தியிருக்கின்றார்.[3] இவர் புனைகதையின் மிக பெரிய சமகால எழுத்தாளர் என்றும் "கனடாவின் செக்கோவ்" என்றும் புகழப்படுள்ளார்.[4].82 வயதாகும் முன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் அவர் ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.[5]

விரைவான உண்மைகள் ஆலிசு மன்றோAlice Munro, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இவரது தந்தையார் பெயர் லெயிட்லா ஒரு விவசாயி. தாய் அன்னி கிளார்க் ஒரு பள்ளி ஆசிரியை. ஆலிசு மன்ரோ தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் கதையான ஒரு நிழலின் வடிவம் (The Dimensions of a Shadow) 1950 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வெளியானது. அந்நேரத்தில் இவர் உணவு பரிமாறுபவராகவும், நூலக எழுத்தராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மன்ரோ ஜேம்ஸ் என்பவரை 1951-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சீலா, கேத்தரின், ஜெனி ஆகிய குழந்தைகள் பிறந்தன. இதில் கேத்தரின் பிறந்த 15 மணி நேரதில் இறந்து விட்டார். 1963-இல் இத்தம்பதியினர் விக்டோரியா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மன்றோ புத்தகங்கள் (Munro's Books) என்ற புத்தகக் கடையைத் தொடங்கினர். அக்கடையானது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1966-இல் இவர்களுக்கு ஆண்ட்றா என்ற குழந்தை பிறந்தது. இவர்கள் 1972-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் மன்றோ ஜெரால்ட் பிரீம்லின் எனும் புவியியலாளரைத் திருமணம் செய்து கொண்ட்டர். பிரீம்லின் 2013 ஆம் ஆண்டு இறந்தார்.[6]

இறப்பு

மறதிநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆலிசு மன்றோ 2024 மே 13 அன்று கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள அவரது வீட்டில் அவரது 92-ஆவது அகவையில் காலமானார்.[7][8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads