ஆழ்வார் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆழ்வார் (Aalwar) (ⓘ) செல்லாவின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் அசின் கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறீகாந்த் தேவாவினால் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Remove ads
திரைக்கதை
கோயில் அர்சகரான சிவா அம்மா மற்றும் தங்கையுடன் பாசமாக வாழும் சிவா பிரசங்கம் ஒன்றில் கடவுள் மனிதவுருவத்தில் அவதாரம் எடுத்தே துன்பங்களை நீக்கி உலகில் இன்பத்தை நிலைநாட்டுவதாகக் கூறியது மனதில் ஆழப்பதிகின்றது. வீடு சென்ற சிவா தன் தாயாரிடமும் இதுபற்றிக் கேட்டக தாயாரும் அப்பா அதற்காகத்தான் சிவா என்று பெயரிட்டுருப்பதாகத் தெரிவிக்கின்றார். பின்னர் சம்பவம் ஒன்றில் தாயாரும் தங்கையும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிவா ஓர் வைத்திய சாலையில் எடுபிடி வேலைசெய்யும் ஒருவராகமாறி தானும் ஓர் அவதாரம் என்ற கொள்கை சிவாவின் மனதில் இடம்பிடித்து வில்லன்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து ஆசாபாசங்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்கின்றார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் இருந்து வரும் அசின் சிவா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து எவ்வாறு சிவாவின் மனதில் இடம் பிடிக்கின்றார் என்பதே இத்திரைப்படமாகும்.
Remove ads
நடிகர்கள்
- அஜித் குமார் - சிவா
- அசின் - பிரியா
- விவேக்
- மனோரமா
- கீர்த்தி சாவ்லா - மது
- லால்
- ஆதித்யா சிறீவசுதவா
- கீதா
- வின்சென்ட் அசோகன்
- சத்யன்
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஆ க்ஷன் கதை, ஷங்கர் டைப் ஃப்ளாஷ்பேக், இரண்டும் இருந்தால் ஓ.கே. ஆகிவிடும் என்று போடப்பட்ட கணக்கு!... முதல் படத்தில் இவ்வளவு வீக்கான ஸ்க்ரிப்ட்டுடன் இறங்கி இருக்கக் கூடாது என்று இயக்குநர் ஷெல்லாவுக்கும், கதையைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாவிட்டால் என்னவாகும் என அஜீத்துக்கும்... ஆழ்வார், சரியான பாடம்!" என்று எழுதி 36100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads