ஆவிவேக மானி

From Wikipedia, the free encyclopedia

ஆவிவேக மானி
Remove ads

ஆவிவேக மானி (aeolipile or aeolipyle or eolipile) அல்லது ஈரோனின் இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தகடில்லாத அமைப்பாகும், நீருள்ள கொள்கலனை சூடேற்றும் போது, துழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி விசைப்பீறியிலிருந்து சுழல்சக்கரம் (Turbine) வழியாக வெளியேறும் நீராவி, சுழல திருப்பு விசையை (Torque) உண்டாக்கும்.[1] அல்லது ஏவூர்திப் பொறி.[2] முதலாம் நூற்றாண்டில் ரோமானிய எகிப்தைச் சேர்ந்த அலெசாண்டிராவின் ஈரோனால் இக்கருவி உருவாக்கப்பட்டது. பல வரலாற்றுப் பதிவுகள் இவருடைய கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளன.[3]

Thumb
ஆவிவேக மானியின் வரைபடம்

ஈரோனின் ஆவிவேக மானி இயந்திரமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவிப் பொறியாகும்.[4] ஈரோனின் கண்டுபிடிப்புக்கு முன்பே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோவினால் இக்கருவி பற்றிய விளக்கம் தரப்பட்டது. ஆனால் சுழலும் பாகங்களைப் பற்றிய விளக்கம் அவரால் தரப்படவில்லை.[5]

Remove ads

இயங்கும் விதத்திற்கான விளக்கம்

Thumb
ஆவிவேக மானியின் வகுப்பறை மாதிாி

ஆவிவேக மானி என்பது ஒரு அச்சில் சுழலும் வகையில், உருளை அல்லது கோள வடிவம் கொண்ட பாத்திரத்தைக் கொண்டது. அதில் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ள இரு கூம்புக்குழாய்களும் அதன் வாயில் ஒரு விசைப்பீறியும் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திரத்திலிருந்து வெளியேறும் அதிகம் அழுத்தப்பட்ட நீராவியானது, ஏவூர்தியில் வெளியேறும் வாயுவைப் போல் அதிக உந்துவிசையுடன் வெளியேறுகிறது. [6] இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நியூட்டனின் இயக்க விதிகள் அடிப்படையில் செயல்படுகிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தாக செயல்படும் விசைப்பீறிகள், எதிரெதிர் திசையில் விசைகளை செயல்படுத்தி சுழலிணைத் திருப்புத்திறனை (Couple) அல்லது முறுக்கு விசையை (torque) உருவாக்குகிறது. இதனால் பாத்திரம் சுழலத் தொடங்குகிறது. சுழலும் பாத்திரத்தின் அடியில் ஒரு வெப்பப்படுத்தி மூலம் நீர் சூடாக்கப்படுவதாக ஈரோன் விளக்கினார்.

Remove ads

வரலாறு

Thumb
ஈரோனின் காற்றழுத்தக் கருவி விளக்கப்படம்

(கிமு 285–222) ல் வாழ்ந்த செட்சிபியசு என்ற எகிப்திய கணிதவியலாளாின் காற்றழுத்தக் கருவிக்கான விளக்கத்திலிருந்து, ஈரோன் மற்றும் விட்றுவியசு ஆகியோர் காற்றழுத்தக் கருவிக்கான விளக்கப்படத்தை வரைந்தனர். செட்சிபியசு காற்றழுத்தத்தின் பயன் மற்றும் இறைப்பானின் பயன் பற்றி தனது கட்டுரைகளில் எழுதியிருந்தார்.

மார்க்கஸ் விட்ருவியசு பொல்லியோவின் விளக்கம்

கிமு 80 முதல் கிபி 15 வரை வாழ்ந்த மார்க்கசு விட்ருவியசு பொல்லியோ ஆவிவேக மானியைப் பற்றி விளக்கியுள்ளார். ஆவிவேக மானி நீரை நிரப்பும் வகையில் சிறு துளையைக் கொண்ட உள்ளீடற்ற பாத்திரத்தால் ஆனது . நீரை சூடாக்கும் போது சிறிது சிறிதாக அழுத்தம் அதிகரித்து பாத்திரம் சுழலத் தொடங்குகிறது.[5]

ஈரோனின் விளக்கம்

கிபி 10 முதல் 70 வரை வாழ்ந்த ஈரோன், நடைமுறையில் செயல்படுவதற்கேற்ற ஆவிவேக மானியை வடிவமைத்தார்.

Remove ads

ஆவிவேக மானியின் பொதுவான பயன்பாடு

Thumb
ஈரோன் ஆவிவேக மானியின் நவீன மாதிாி

பண்டைய காலத்தில் இக்கருவியின் பயன்பாட்டைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை, ஆனால் நவீன இயந்திரங்களை உருவாக்க முதற்படியாக இருந்தது என்பது உறுதியாகிறது.

மேலும் பார்க்க

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads