ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம் (Territory of Ashmore and Cartier Islands) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் தீவுக் கூட்டம் ஆகும். ஆஸ்திரேலியாவினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், இந்தோனீசியாவின் ரோட்டி தீவின் தெற்கேயும் அமைந்துள்ளன.



புவியியல்
இப்பிரதேசம் ஆஷ்மோர் கற்பாறை (Ashmore Reef), (கிழக்கு குறுந்தீவுகள்) மற்றும் கார்ட்டியர் தீவு (70 கி.மீ. கிழக்கே) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாறைகள் மற்றும் குடாக்களிடையே 199.45 கி.மீ.² பரப்பளவையும், வெற்று நிலம் 114,400 மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது. 74.1 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இங்கு துறைமுகங்கள் எதுவும் இல்லை. ஆஷ்மோர் கற்பாறைக்கு 42 கி.மீ. தூரத்தில் உள்ள ஹைபேர்ணியா கற்பாறை இப்பிரதேசத்தில் அடங்கவில்லை.
Remove ads
அரசாங்கம்
இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் இருந்து சட்டமா அதிபர் திணக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது[1]. இதன் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்படை, மற்றும் வான்படை இங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
