ஆஹா கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஹா கல்யாணம் என்பது மார்ச் 9, 2020 முதல் மார்ச் 21, 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது கலர்ஸ் சூப்பர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாங்கல்யம் தந்துநானேனா என்ற கன்னட மொழித் தொடரின் மொழிமாற்றமாகும்.கொரோன விருஸ் முழு ஊரடங்கு கருதினால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்த பட்டு உள்ளது.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஷாலினி, தன் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்பவர். திருமண யோகத்திற்காக காத்திருக்கும் அவரால் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைக் கண்டறிய இயலவில்லை. ஒருமுறை, அவர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதன் விளைவாக, தீனா என்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்கள் இருவரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இத்தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது.
Remove ads
கதாபாத்திரங்கள்
முதன்மை கதாபாத்திரங்கள்
- திவ்யா வகுக்கர் - ஷாலினி
- ஆர்.கே.சந்தன் - தீனா
துணை கதாபாத்திரங்கள்
- பவித்ரா அரவிந்த் - மாது (ஜெயந்தியின் மகள்)
- ஸ்பந்தனா பிரசாத் - ஜெயந்தி (ஜெய் பிரகாஷின் தங்கை)
- சங்கீதா அனில் - வைதேகி (தீனாவின் தாய், ஸ்ரீதர் மூர்த்தியின் தங்கை)
- ஹனுமந்தே கவுடா - ஜெய் பிரகாஷ் (தீனாவின் தந்தை)
- பிரதீப் திப்டூர் - ஸ்ரீதர் மூர்த்தி (ஷாலினியின் தந்தை)
- வீணா சுந்தர் - பார்வதி (ஷாலினியின் தாய்)
- சந்தன் சசி - (ஷாலினியின் அண்ணன்)
- பிரஜ்னா பட் - பாவனி (ஷாலினியின் தங்கை)
- அருண் மூர்த்தி - கோதண்டபாணி (ஸ்ரீதர் மூர்த்தியின் தம்பி, ஷாலினியின் சிற்றப்பா)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads