ஆ. ச. தம்பையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்தர் சரவணமுத்து தம்பையா (Arthur Saravanamuthu Thambiah)(சனவரி 2, 1924 - மே 11 ,2011) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த தோல் மருத்துவர் ஆவார். இவர் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் மருத்துவராகச் சேவையாற்றியுள்ளார்.[1] தம்பையா 1961ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறைத் தலைவராகப் பதவி வகித்தார். ஒட்டுமொத்தமாக இவரது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார்.[2][3].
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
தம்பையாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவர்.[3]. இவர்களைப் பின்பற்றி மதராசு மருத்துவக் கல்லூரியில் 1946ஆம் ஆண்டு மருத்துவராகப் பட்டம் பெற்றார். இலண்டன் இராயல் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் எம்.ஆர்.சி.பி படிப்பை முடித்தார். இப்படிப்பை முடித்த முதல் தென்னிந்தியர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது. இலண்டன் கேம்பிரிட்ச், எடின்பரோவில் பயிற்சி பெற்றப் பின்னர், மீண்டும் சென்னையில் மதராசு மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு இந்தத்துறையில் முதல் தொழில்முறைப் பதவி ஏற்படுத்தப்பட்டபோது தம்பையா அதன் முதல் பேராசிரியராக விளங்கினார். 1982ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் சென்னை பொதுமருத்துவமனையில் தோல் மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மருத்துவச் சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகத் திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேசத் தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் மரு. பி. சி. ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
தம்பையா, 2011ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று தன்னுடைய 87ஆவது வயதில் காலமானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads