இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு

From Wikipedia, the free encyclopedia

இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு
Remove ads

எட்வேர்டு VI (12 அக்டோபர் 1537 - 6 சூலை 1553) இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் ஆறாவது மன்னர். இவர் 28 சனவரி 1547 ஆம் ஆண்டு முதல் தனது இறப்பு வரையிலும் மன்னராக இருந்தார். இவரின் 9 வது அகவையில் 20 பிப்ரவரி அன்று மன்னராக மகுடம் சூட்டப்பட்டது.[1] இவரது தந்தை ஹென்றி VIII மற்றும் தாய் ஜானி செமோர். இவர் சீர்திருத்தச் திருச்சபை மரபுகளைப் பின்பற்றும் இங்கிலாந்தின் முதல் மன்னராக வளர்க்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில், அரசாங்கப் பணிகளை மன்னர் எட்வேர்டு உரிய வயதுக்கு வரும் வரையில் அரசப் பிரதிநிதிகள் கவனித்து வந்தனர். பிரதிநிதிகளின் சபையை முதலில் அவரது மாமா எட்வேர்டு செமோர், சோமர்செட்டின் முதலாவது டியுக் (1547-1549) கவனித்துக் கொண்டார். அடுத்தபடியாக ஜான் டுடிலி, வார்விக்கின் முதல் ஏர்ல் (1550-1553) (1551 ஆண்டின் நார்தம்பர்லேண்டின் டியுக்) பார்த்துக் கொண்டார்.

விரைவான உண்மைகள் எட்வேர்டு VI, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மன்னர் (more ...) ...

எட்வேர்டு ஆட்சியில் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சமூக அமைதியின்மை நீடித்திருந்தது. அதனால் கலவரங்கள் மற்றும் கலகங்கள் அதிகரித்திருந்தது. அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்திய ஸ்காட்லாந்துடனான போரில் முதலில் வெற்றி பெற்றாலும். ஸ்காட்லாந்திலிருந்து வீரர்களை போர் நிலைகளில் இருந்து திரும்பப் பெற்றதுடன் அமைதிக்காக வடக்கு பிரான்ஸில் உள்ள போலோன் சுர் மெர் நகரைப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எட்வேர்டு மத விசயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவரது ஆட்சியில், இங்கிலாந்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் அங்கீகாரம் பெற்ற சீர்திருத்தச் திருச்சபை சமுதாயமாக மாறியது. இவரது தந்தை, ஹென்றி VIII, தேவாலயத்திற்கும் ரோம் நகருக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டித்துவிட்டிருந்தாலும், கத்தோலிக்க கோட்பாட்டின் படி துறவு ஏற்பது அல்லது சடங்குகளை மறுதலிப்பதை ஹென்றி VIII அனுமதிக்கவில்லை. எட்வேர்டு ஆட்சியின் போது இங்கிலாந்தில் முதல் தடவையாக சீர்திருத்தச் திருச்சபை நிறுவப்பட்டது. மேலும் பல மதச் சீர்திருத்தங்கள் செய்தார். மதகுருக்கள் மற்றும் மதக்கூட்டங்கள் ஆகியவற்றை ஒழித்தார். மற்றும் ஆங்கிலத்தில் கட்டாய சேவை சுமத்தியது போன்றவகைகளையும் ஒழித்தார். இப்படி பல நடைமுறைகள் ஒழிக்கப்பட்டது.

பிப்ரவரி 1553 வது ஆண்டில், 15 வயதில் எட்வேர்டு நோயுற்றிருந்தார். அவரது நோய் முற்றியதையும் அதனால் தனது இறுதி நாட்கள் நெருங்கியதையும் கண்டறிந்த போது, தனது மறைவுக்குப் பிறகு, கத்தோலிக்க மதத்திற்கு நாடு திரும்புவதைத் தடுக்க அவர் மற்றும் அவரது அரசப் பிரதிநிதிகளின் சபை அடுத்த வாரிசுக்கானத் திட்டத்தை வரைந்தனர். அதன்படி எட்வேர்டு, தனது அடுத்த வாரிசாக மாமா மகளான சீமாட்டி ஜானி கிரேவை நியமித்தார். மேலும் தனது ஒருவழிச்சகோதரிகளான மேரி மற்றும் எலிசபத் ஆகியோரைத் தவிர்த்து விட்டார். ஆனால் எட்வேர்டின் இந்த முடிவு, அவர் இறந்த பின்னர் பெரும் விவாதத்திற்குள்ளானது. ஜானி ராணியாக வெறும் ஒன்பது நாட்களே இருந்தார். பின்னர் நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மேரி பட்டத்து ராணியானார். இவரது ஆட்சியில், எட்வேர்டின் சீர்திருத்தச் திருச்சபை சம்பந்தமான அனைத்து சீர்திருத்தங்களையும் தலைகீழாக மாற்றினார். இது எவ்வாறாயினும், 1559 ஆம் ஆண்டில் எலிசபத்தின் மதத் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads