இசுக்கார்பரோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுக்கார்பரோ என்பது கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டம். இது நகரின் கிழக்குப் பகுதியில் இசுக்கார்பரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. இது மேற்கில் விக்டோரியா பார்க் நிழற்சாலையையும் வடக்கில் ஸ்டீலஸ் நிழற்சாலையையும் மார்கம் நகரையும் கிழக்கில் ரூஜ் ஆற்றையும் பிக்கெரிங் நகரையும் தெற்கில் ஒண்டாரியோ ஏரியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மேலைக் கனடாவின் முதல் துணைநிலை ஆளுநரான ஜான் கிரேவ்ஸ் சிம்கோவின் மனைவி எலிசபெத் சிம்கோ என்பவரால் இந்தப்பகுதி 1796-இல் இசுக்கார்பரோ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட செங்குத்துப்பாறைகள் (Cliff) இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்சைரில் உள்ள இசுக்கார்பரோ நகரில் உள்ளதைப் போன்று தோற்றமளித்ததால் அந்நகரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது.[2][3]
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இருந்து கனடாவுக்குப் புதிதாகக் குடியேறுபவர்களின் விருப்பமான மாவட்டமாக இருந்துவருகிறது. இதனால், பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டு டொரன்டோ பெரும்பாகத்தின் ஒரு பரவலான பன்முகப்பண்பாடு மிக்க பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை, ரூச் பூங்கா, இசுக்கார்பரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம் உள்ளிட்ட நில அடையாளங்களைக் கொண்டுள்ளது. டொரன்டோவில், இறுதியாக எஞ்சியுள்ள சில பண்ணைகளைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி பெரும்பாலும் ஊரகப்பகுதியாக உள்ளது. இவ்வகையில் டொரன்டோவின் மற்ற பகுதிகளை விட இசுக்கார்பரோ பகுதி பசுமையானது என அறியப்படுகிறது.
Remove ads
மேலும் பார்க்க
குறிப்புகள்
- Population calculated by combining the populations of the six federal ridings.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads