இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014

From Wikipedia, the free encyclopedia

இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014
Remove ads

இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது.[1] மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.[2] இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் ஆதரவாகவும், மீதமுள்ள பிரதேசங்களில் எதிராகவும் வாக்குகள் பதிவாகின.[3]

மேலதிகத் தகவல்கள் இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014, தேர்தல் முடிவுகள் ...

இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி,[4] ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,[5] 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.[6]

ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி "ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும்.[7] ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads