இசுமார்ட் சுரங்கப்பாதை

From Wikipedia, the free encyclopedia

இசுமார்ட் சுரங்கப்பாதை
Remove ads

இசுமார்ட் சுரங்கப்பாதை (ஆங்கிலம்; Stormwater Management And Road Tunnel (SMART Tunnel); மலாய்: E38  Terowong Jalan dan Pengurusan Air Banjir) (Terowong SMART) என்பது மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு வெள்ள வடிகால் அமைப்பு; மற்றும் சாலை அமைப்பு ஆகும். மலேசிய நாட்டின் ஒரு பெரிய தேசிய திட்டமாகவும் (Malaysian National Projects) அறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் இசுமார்ட் சுரங்கப்பாதை, வழித்தடத் தகவல்கள் ...

இந்தச் சுரங்கப்பாதை 9.7 கிமீ (6.0 மைல்) நீளம் கொண்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிக நீளமான மழைநீர் வடிகால் சுரங்கப் பாதையாகவும்; ஆசியாவின் இரண்டாவது மிக நீளமான சுரங்கப் பாதையாகவும் தடம் பதிக்கிறது.[2]

கோலாலம்பூரில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்; புடு, சுங்கை பீசி சாலை மற்றும் லோக் யூ மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில், மழைநீர் சுரங்கப்பாதை மற்றும் வாகனப் போக்குவரத்து சுரங்கப்பாதை என இரண்டு கூறுகள் உள்ளன: அந்த வகையில் இதுவே உலகின் மிக நீளமான பல்நோக்கு சுரங்கப்பாதையாகவும் அறியப்படுகிறது.[3][4]

Remove ads

ஐக்கிய நாட்டு சிறப்பு விருது

2011-ஆம் ஆண்டில், வெள்ள நீர் மற்றும் உச்ச நேரப் போக்குவரத்துப் பிரச்சினையை, புதுமை கலந்த தனித்துவமான முறையில் செயல்படுத்தியதற்காக ஐக்கிய நாட்டு அவையின் வாழிட சிறப்பு விருதை (UN Habitat Scroll of Honor) இசுமார்ட் சுரங்கப்பாதை பெற்றது.

இந்தச் சுரங்கப்பாதை அம்பாங்கில் உள்ள கிள்ளான் ஆற்றுக்கு அருகிலுள்ள கம்போங் பெரெம்பாங் ஏரியில் தொடங்கி சாலாக் செலாத்தான் பகுதியில் (Salak South) உள்ள கெராயோங் ஆற்றுக்கு அருகிலுள்ள தாமான் தேசா ஏரியில் முடிகிறது. மலேசிய அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் இந்தச் சுரங்கப்பாதைத் திட்டத்தில் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM); நீர்ப்பாசனத் துறை; மலேசிய வடிகால் துறை உள்ளிட்ட பல அரசுசாரா நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. மேலும் காமுடா பெர்காட் (Gamuda Berhad) மற்றும் எம்எம்சி கார்ப்பரேசன் பெர்காட் (MMC Corporation Berhad) ஆகிய தனியார் நிறுவனங்களும் இந்தக் கூட்டு முயற்சியில் பங்களித்து உள்ளன.

Remove ads

செயல்பாட்டு முறைமை

Thumb
நான்கு செயல்பாட்டு முறைகள் மற்றும் சேமிப்பு திறன்கள்.

இந்தச் சுரங்கப்பாதையில் நான்கு செயல்பாட்டு முறைகள் மற்றும் சேமிப்பு திறன்கள் உள்ளன.

  • செயல்பாட்டு முறை 1: வெள்ளப் பெருக்கு இல்லாத காலங்களில், வழக்கமான சாதாரண வெள்ள நீர் சுரங்கப் பாதைக்குள் திருப்பி விடப்படாது.
  • செயல்பாட்டு முறை 2: இந்த முறை செயல்படுத்தப்படும் போது, ​​வாகனங்கள் பயன்படுத்தும் சுரங்கப் பாதைக்கு அடியில் உள்ள புறவழிப்பாதையில் வெள்ளநீர் திருப்பி விடப்படும். இருப்பினும் இந்தக் கட்டத்தில் வாகனங்கள் பயன்படுத்தும் சுரங்கப் பாதை போக்குவரத்திற்கு திறந்திருக்கும்.
  • செயல்பாட்டு முறை 3: இந்த முறை செயல்பாட்டில் இருக்கும்போது, வாகனங்கள் பயன்படுத்தும் அனைத்து சுரங்கப் பாதைளும் போக்குவரத்திற்கு மூடப்படும்.
  • செயல்பாட்டு முறை 4: அனைத்து வாகனங்களும் வாகனப் பாதையிலிருந்து வெளியேறிவிட்டன என்பதை உறுதிசெய்த பின்னர், வெள்ள நீர் கடந்து செல்ல, நீர் புகாத இருப்புக் கதவுகள் தானியங்கி முறையில் இயக்கப்படும்.

வெள்ளம் வடிந்த பிறகு, வாகனங்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதை சரிபார்க்கப்பட்டு, பின்னர் சுத்தம் செய்யப்படும். வாகனங்கள் பயன்படுத்தும் சுரங்கப் பாதை மூடப்பட்ட 48 மணி நேரத்திற்குள்; மீண்டும் போக்குவரத்திற்கு திறக்கப்படும்.[5]

Remove ads

தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்

வெள்ளநீர் சுரங்கப்பாதை

Thumb
கோலாலம்பூர்-சிராம்பான் விரைவுச் சாலையில் உள்ள இசுமார்ட் சுரங்கப்பாதையின் வடக்கு நோக்கிய நுழைவாயில்
Thumb
இசுமார்ட் சுரங்கப்பாதையின் நுழைவாயில் 1
Thumb
இசுமார்ட் சுரங்கப்பாதையின் நுழைவாயில் 2
  • கட்டுமானச் செலவு: RM 1,887 மில்லியன் (US$ 514.6 மில்லியன்)
  • வெள்ளநீர் சுரங்கப்பாதை நீளம்: 9.7 km (6.0 mi)
  • விட்டம்: 13.2 மீ (43.3 அடி) (வெளிப்புற விட்டம்)
  • சுரங்கப்பாதை முறை: சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் (Tunnel Boring Machine) (TBM)
  • துளையிடும் இயந்திர வகை: குழம்பு கவசம்

வாகன சுரங்கப்பாதை

கூறுகள்

  • உலகின் முதல் இரட்டை செயல்பாட்டுச் சுரங்கப்பாதை (வெள்ள நீர் மேலாண்மை & சாலை)
  • மலேசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை
  • 9.7 கிமீ (6.03 மைல்) வெள்ள நீர் புறவழிச் சுரங்கப்பாதை
  • 4 கிமீ (2.49 மைல்) வெள்ள நீர் சுரங்கப்பாதைக்குள் இரட்டை அடுக்கு வாகனப் பாதை
  • சுரங்கப்பாதையின் வாகனப் பாதை இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே ஏற்றது; விசையுந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை
  • தெற்கு நுழைவாயிலை நகர மையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதையில் நுழைவு மற்றும் வெளியேறும் வாகனப் புறவழி இணைப்புகள்
  • வெள்ள நீரை உடனடியாகத் திசை மாற்றும் செயல்திட்டம்
  • சுரங்கத்திற்குள் வெள்ள நீர் சேமிப்பு நீர்த்தேக்கம்; வெள்ள நீரை மாற்றுவழியில் வெளியேற்ற இரட்டைக் கால்வாய்கள்
  • இசுமார்ட் அமைப்பின் செயல்பாட்டு மேலாண்மை; கண்காணிப்பு; மற்றும் அண்மைய முறைமைகளுடன் அதிநவீன செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறை.
  • தீ ஏற்பட்டால் விரைவாக அணுகக்கூடிய இரண்டு நவீன தீயணைப்பு வாகனங்கள்[6]
Remove ads

சுங்கக் கட்டணம்

மேலதிகத் தகவல்கள் பிரிவு, வாகனங்களின் வகை ...
குறிப்பு:
  • வாடகை உந்துகள்   Touch 'n Go   தொட்டு செல் அட்டைகள் மூலமாக மட்டுமே சுங்கக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.
  • தனியார் சிற்றுந்துகள்; கூடு உந்துகள்; சிறிய சரக்கு வாகனங்கள்   Touch 'n Go   தொட்டு செல் அட்டைகள், SmartTAG இஸ்மார்ட் அட்டைகள் (SmartTAG) அல்லது MyRFID வானலை அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads