இசைஞானியார் நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 3 பெண் நாயன்மார்களில், 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவர். From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார்[1][2][3]. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் இசைஞானியார் நாயனார், பெயர்: ...
Remove ads

தொன்மம்

திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.

Thumb
சுந்தரமூர்த்தி நாயனாரின் குடும்பம்: இடமிருந்து வலமாக சடைய நாயனார் (தந்தை), இசைஞானியார் (தாய்), பரவை நாச்சியார் (மனைவி), சுந்தரர், சங்கிலி நாச்சியார் (மனைவி), நரசிங்கமுனையரைய நாயனார் (வளர்ப்புத் தந்தை).
Remove ads

குருபூசை

இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads