இசைத்தமிழ்க் கலம்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசைத் தமிழ்க் கலம்பகம் என்பது 1966ல் தேவநேயப்பாவாணரால் வெளியிடப்பட்ட 303 இசைப்பாடல்களைக் கொண்ட நூலாகும். குறியீட்டு விளக்கம், பாட்டுறுப்புப் பெயர்கள், தாளப் பெயர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பாட்டு உறுப்புக்கள்

  1. பல்லவி என்பதை தமிழ்ச் சொல்லாகவே கொள்கிறார் பாவாணர்.
  2. துணைப்பல்லவி
  3. சரணம் என்பதை உருவடி (உரு- பாட்டு, அடி- சரணத்தின் நேரடி மொழிபெயர்ப்பு)என்றும்,
  4. தொகையரா எனும் உருதுச் சொல்லை, உரைப்பாட்டு என்றும் மொழிபெயர்த்துள்ளார்.

தாளம்

தாளம் என்பது ஆடலின் போது காலால் தட்டுவதையும்(தாள்-பாதம்), பாணி என்பது பாடுவோர் கையால் தட்டலையும் குறிக்கும். (பண்-பாணி=கை)[1] அறுவகை தாளங்களையும் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்.

  • ஏகம் - ஒற்றை
  • ஆதி - முன்னை
  • ரூபகம் - ஈரொற்று
  • சம்பை - மூவொற்று
  • திரிபுடை- மூப்புடை
  • சாப்பு - இணையொற்று

சில கலம்பகக் கீற்றுகள்

''அன்றிருந்ததும் அயன்மொழி
இன்று வந்ததும் அயன்மொழி
என்றுதான் இங்குத் தமிழ்மொழி
ஏத்துநாட்டினை வாழ்த்து மொழி'' (150)

என மொழி விடுதலை இன்மையை எளிமையாய்ச் சிந்திக்க வைக்கிறார்.

''எளிதாகப் பேசுமொழி தமிழ்பாப்பா-மூச்
சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா - தமிழ் பேசுபாப்பா'' (251)

என மழலைகளுக்கு மொழிகிறார்.

'' எல்லோரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்''
''பொல்லாப் பகையும் பசியும் பிணியும்
இல்லாமல் எங்கும் நன்கணம்'' (303)

என இசைத்தமிழ் கலம்பகத்தை இனிக்க முடிக்கிறார்.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads