இசைநுணுக்கம்
தமிழிசை இலக்கண நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசைநுணுக்கம் (Isai Nunukkam) என்பது கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும்.
அடியார்க்கு நல்லார் குறிப்பு
அநாகுலன் என்னும் பாண்டியனின் மகன் சாரகுமாரன் என்பவனுக்கு இசை கற்பிப்பதற்காக அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம் ஆகும்.[1] இசை நுணுக்கத்திலிருந்து நான்கு செய்யுள்களை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார். அவர் மேற்கோள் காட்டும் செய்யுள்களில் ஒன்று பின்வருமாறு:[2]
“ | செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே-கந்தருவத் |
” |
Remove ads
பரவலர் பண்பாட்டில்
நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் புதினத்தில் இசைநுணுக்கம் பற்றி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வெண்டேர்ச் செழியன் என்னும் பாண்டியர் மன்னனின் ஆட்சியில் அவரது பேரனான சாரகுண பாண்டியன் மற்றும் சாரகுணனின் காதலியான கண்ணுக்கினியாள் ஆகியவர்களின் இசை ஞானம் பொருட்டு சிகண்டியாசிரியர் என்னும் புலவரால் அவர்களின் இசை ஆராயப்பட்டு 59 புலவர்கள் முன்னும் இடைச்சங்கம் இருந்த கபாடபுர அரண்மனையில் அரங்கேறுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads