இசையில் இரைச்சல்

From Wikipedia, the free encyclopedia

இசையில் இரைச்சல்
Remove ads

இசையில் இரைச்சல் (Noise in music) என்பது பலவிதமாக விவரிக்கப்படுகிறது. இரைச்சல் என்பது உறுதியற்ற, கட்டுப்பாடற்ற, மெல்லிசையற்ற, உரத்த, அல்லது இசையற்ற, அல்லது தேவையற்ற ஒலி என்று விவரிக்கப்படுகிறது. சரியான வரையறையானது பெரும்பாலும் கலாச்சார விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுவைகள் இரண்டும் இணைந்த விஷயமாகும். இரைச்சல் என்பது மனிதக் குரல் மற்றும் அனைத்து இசைக்கருவிகளின் ஒலியின் ஒரு முக்கிய அங்கமாகும். மின்னணுவியில் கருவிகள் இரைச்சலின் பல்வேறு வகைகளை உருவாக்குகின்றன. மிகவும் பொதுவான பயன்பாட்டில், இரைச்சல் என்பது தேவையற்ற ஒலி அல்லது சமிக்ஞையாகும். இந்தப் பொருளில், மற்றொரு சூழலில் இசை ரீதியாக சாதாரணமாக உணரப்படும் ஒலிகள் கூட பெறுபவரால் விரும்பும் செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்டால் இரைச்சலாக மாறும்.[1]

Thumb
ஜிமி ஹென்றிக்ஸ் பின்னூட்டம், சிதைத்தல், வாஹ், ஃபஸ்ஸ், முரணொலி மற்றும் உரத்த ஒலி போன்ற நுட்பங்களின் மூலம் இரைச்சலை இணைத்து ராக் மற்றும் ஜாஸில் புரட்சியை ஏற்படுத்தினார்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads