இடாய்ச்சு இலக்கணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இடாய்ச்சு இலக்கணம் எனப்படுவது இடாய்ச்சு மொழியின் இலக்கணம் ஆகும். இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு இலக்கணத்தில் பெயர்ச்சொற்கள், ஆண்பால் Maskulinum (der), பெண்பால் Femininum (die), ஒன்றன்பால், (அஃறிணை) Neutrum (das) என மூன்று பால்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தப் பால் வேற்றுமைகள் முறையே der, die, das என்ற சுட்டிச்சொற்களால் இனம் காணப்படுகின்றன. ஆனாலும் தமிழ்இலக்கணத்தில் உள்ளது போல ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, இந்த der, die, das என்பன பெயர்ச் சொற்களுடன் இணைவதில்லை. தமிழ் இலக்கணத்தில் குறிக்கப்படுவது போலவே ஆண், ஆண்பாலாகவும் பெண், பெண்பாலாகவும் குழந்தை அஃறிணையாகவும் குறிக்கப்பெற்றிருந்தாலும், மேசை, அலுமாரி போன்றவை கூட ஆண்பாலுக்குள் அடங்குகின்றன. யன்னல், கட்டில் போன்றவை அஃறிணைக்குள் அடங்குகின்றன. உதாரணமாக வாய் ஆண்பாலாகவும், மூக்கு பெண்பாலாகவும், கண் அஃறிணையாகவும் என்று ஓர் ஒழுங்கற்ற முறையிலேயே வகுக்கப் பட்டிருக்கிறது. வேற்றுமைகள் எழுவாய் (Nominativ), இரண்டாம் வேற்றுமை (Akkusativ), நான்காம் வேற்றுமை (Dativ), ஆறாம் வேற்றுமை (Genitiv) என நான்கு வேற்றுமைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தமிழ் இலக்கணத்தில் எட்டு வேற்றுமைகளுக்குள் வருகின்ற விடயங்கள் அத்தனையும் இதில் நான்கு வேற்றுமைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன.[1]

Remove ads

பால்கள்

சில எடுத்துக்காட்டுகள்

Maskulinum (der) (ஆண்பால் – ஒருமை)

  • der Vater – தந்தை
  • der Arm - கை
  • der Bauch - வயிறு
  • der Finger - விரல்
  • der Hals - கழுத்து
  • der Kopf - தலை
  • der Stern - நெற்றி
  • der Hund - நாய்

Femininum (die) (பெண்பால் – ஒருமை)

  • die Mutter – தாய்
  • die Katze - பூனை (பெண்பால் – ஒருமை)
  • die Nase - மூக்கு
  • die Matratze - மெத்தை
  • die Wand - சுவர்

Neutrum (das) – (ஒன்றன்பால் - ஒருமை)

  • das Kind – குழந்தை (ஒன்றன்பால் - ஒருமை)
  • das Auge - கண்
  • das Bein - கால்
  • das Bett - கட்டில்
  • das Brett - பலகை
  • das Fenster - யன்னல்
  • das Kissen - தலையணி
  • das Zimmer - அறை

பன்மை

  • die Kinder - குழந்தைகள்
  • die Auge - கண்கள்
Remove ads

வேற்றுமைகள் (Kasus)

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads