இடியப்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடியப்பம் அல்லது இடியாப்பம் (ⓘ) என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே பொதுவாக செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுத்தலாம். இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்.
இடியப்பம் அவியல் செயன்முறையில் அமைந்த உணவு ஆகும். இலங்கை சிறார்களின் முக்கிய பாடசாலை உணவாக உள்ளது. குடல் செரிமானதுக்கு உகந்த உணவாகையால் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர்க்கு ஏற்ற உணவாகும்.[1][2][3]
Remove ads
சம்பல், சொதி
இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads