இடும்பாவனம்

திருவாரூர் மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இடும்பாவனம் (Idumbavanam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இடும்பாவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

விரைவான உண்மைகள் இடும்பாவனம், நாடு ...

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், முத்துப்பேட்டையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 353 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

இந்த கிராமத்தில் 2127 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7345 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3730 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3615 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 67.2 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

தொடருந்து நிலையம்

அருகில் உள்ள தொடருந்து நிலையம் தில்லைவிளாகம் தொடருந்து நிலையம் ஆகும்.

கோயில்கள்

இந்த ஊரில் பாடல் பெற்றத் தலமான இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் உள்ளது.

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads