இடைக்காடர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இடைக்காடர் திருவள்ளுவ மாலையின் 54-ஆவது குறட்பா வடிவில் உள்ள பாடலை இயற்றியுள்ளார்.[1] இவர் சங்ககாலப் புலவர் இடைக்காடனார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.

வாழ்க்கை

மதுரைக்கு அருகிலுள்ள இடைக்காடு என்ற ஊாிலிருந்து வந்த சித்தர் இடைக்காடர்.[1][2] இடைக்கலி நாட்டைச் சேர்ந்தவர்.[3] சிறந்த உதாரணங்களோடு பாடல் பாடுவதில் வல்லவர். சோழ மன்னன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றி (புறநானுாறு பாடல் 42) போற்றிப் பாடியுள்ளார்.[3] "ஊசிமுறி" என்ற இலக்கண நுாலையும் பாடியுள்ளார்.[3]

தமிழ்நாட்டுச் சித்தரான இடைக்காட்டுச் சித்தர் என்பவர் வேறு, சங்க காலப் புலவரான இடைக்காடர் வேறு. இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.

இவர் திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது.[1] ஒருமுறை, பஞசத்தின் பொழுது, நவக்கிரகங்களை இவர் வேண்டி வணங்கினார். அஃது இடைக்காட்டூரில் சிறிய நவக்கிரக கோவிலாக இன்றும் இருக்கிறது.

Remove ads

இலக்கியப் படைப்புகள்

திருவள்ளுவ மாலையின் 54-ஆவது பாடலை இவர் இயற்றியுள்ளார்.[4] அது பின்வருமாறு:

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

இதையே ஒளவையார் "கடுகு' என்ற சொல்லிற்குப் பதிலாக "அணு"[5] என்று சொல்லை மாற்றி

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
என்று திருவள்ளுவ மாலையை நிறைவு செய்கிறார்.
ஒளவையாரும் இடைக்காடரும் மட்டுமே, குறள் வெண்பாவில் திருவள்ளுவமாலையில் திருக்குறளின் பெருமையைப் பாடியுள்ளனர்.[1].
Remove ads

திருவள்ளுவா் மற்றும் திருக்குறளைப் பற்றிய கருத்து

வள்ளுவர் ஏழு சீராலான குறள் வெண்பாக்களால், வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்துள்ளார். இஃது ஏழு கடல்களைக் கடுகில் துளையிட்டு அதில் புகுத்துவதற்குச் சமமானது என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவள்ளுவாின் அறிவை இவ்வாறாகப் போற்றுகிறார்.

மேலும் பார்க்க

திருவள்ளுவமாலை

சங்க இலக்கியம்

சங்கப் புலவா்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads