இட்டெர்பியம்(III) அசிட்டேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்டெர்பியம்(III) அசிட்டேட்டு (Ytterbium(III) acetate) Yb(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியதாகவும் நீரேற்றுகளை உருவாக்கக்கூடியதாகவும் உள்ளது.[1][2]
Remove ads
இயற்பியல் பண்புகள்
இட்டெர்பியம் படிகங்களாக உருவாகும். தண்ணீரில் எளிதில் கரையும். இதன் நீரேற்றுகள் Yb(CH3COO)3·nH2O வடிவில் உள்ளன. இங்குள்ள n= 1, 4, 6 என்ற மதிப்புகள் கொண்டதாகும்.[1][2]
பயன்கள்
இட்டெர்பியம்(III) அசிட்டேட்டை சில ஒளிரும் பொருள்களை தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.[3] இதேபோல சில குறிப்பிட்ட கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் இதை வினையூக்கியாகவும் பயன்படுத்தலாம்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads