இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Yttrium acetylacetonate) C15H21O6Y என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இட்ரியத்தின் அணைவுச் சேர்மமான இதை Y(acac)3 என்ற சுருக்கக் குறியீட்டாலும் குறிப்பிடுவர். 2.08, 3.81 மற்றும் 4.98 (n=1, 2, 3) என்பவை இதன் உறுதியற்ற மாறிலிகள் மதிப்பாகும்.[2] மூவல்காக்சியிட்ரியம் [3]அல்லது திரிசு[பிசு(மும்மெத்தில்சிலில்) அமினோ]யிட்ரியம் சேர்மத்துடன் [4] அசிட்டைலசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டு தயாரிக்கப்படுகிறது. வெப்பப்படுத்தும்போது இது சிதைந்து இட்ரியம் ஆக்சைடை உருவாக்குகிறது.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads