இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்

From Wikipedia, the free encyclopedia

இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்
Remove ads

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Paralympic Games) உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்; இதில் உடலியக்கக் குறைபாடுகள் உள்ளோர், உறுப்பு நீக்கப்பட்டோர், கண் பார்வை குறைவுள்ளோர், மற்றும் பெருமூளை வாதம் உள்ளோர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் குளிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் தொடர்புடைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழு (IPC) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.

விரைவான உண்மைகள்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய இரண்டாம் உலகப் போர் முதுவர்களின் சிறு சந்திப்பில் நிகழ்ந்தது. படிப்படியாக முன்னேறி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மாற்றுத் திறன் விளையாட்டாளர்கள் வழமையான விளையாட்டு வீரர்களுக்குச் சமமாக விளங்க பாடுபட்டாலும் இருவருக்குமிடையே மிகுந்த நிதியளிப்பு வேறுபாடு உள்ளது. சில விளையாட்டுத் துறைகளில் , காட்டாக தட கள விளையாட்டுக்கள், மாற்றுத் திறனாளிகளை வழைமையான விளையாட்டாளர்களுடன் போட்டியிட மிகுந்த தயக்கம் உள்ளது. இருப்பினும் சில மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கெடுத்துள்ளனர்.[1]

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடற்குறை உள்ளவர்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் இணையாக நடத்தப்படுகின்றன;பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அறிவுத் திறன் குறைபாடு உள்ளவர்களையும் கேள்குறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கேட்கவியலாத விளையாட்டாளர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.[2][3]

மாற்றுத் திறனாளிகளின் பரந்த வகைகளைக் கணக்கில் கொண்டு பல பகுப்புகளில் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுப்புகளாக ஆறு பரந்த பகுப்புகளில் போட்டியாளர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்: உறுப்பிழந்தோர், பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, சக்கரநாற்காலி, பார்வைக் குறைபாடு, மற்றும் லெ ஆதெர்சு (Les Autres, பொருள் "பிறர்" - இந்த ஐந்து பகுப்புகளில் அடங்காதவர்கள்; இவர்களில் குள்ளத் தன்மை, தண்டுவட மரப்பு நோய், மற்றும் பிறவிக் குறைபாடு உள்ளோர் அடங்குவர்). இந்தப் பகுப்புகள் மேலும் பல வகைபாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன; இவை விளையாட்டைப் பொறுத்தவை. இத்தகைய வகைப்பாடுகளை ஒட்டி பல போட்டியாளர்கள் தங்கள் குறைபாடுகளை மிகைப்படுத்தி ஏமாற்றுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன; தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போலவே இதிலும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தும் சர்ச்சைகளும் உண்டு.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads