இண்டியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இண்டியம்(III) நைட்ரேட்டு (Indium(III) nitrate) என்பது In(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியத்தின் நைட்ரேட்டு உப்பான இச்சேர்மம் பல்வேறு நீரேற்றுகளாக உருவாகிறது. இவற்றில் ஐந்துநீரேற்று மட்டுமே மட்டுமே படிகவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்டதாகும். மற்ற நீரேற்றுகளில் முந்நீரேற்று போன்றவை மட்டுமே நூல்களில் பதிவாகியுள்ளன.[1][2][3]
Remove ads
தயாரிப்பு மற்றும் வினைகள்
இண்டியம்(III) நைட்ரேட்டு நீரேற்றை செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தில் இண்டியம் உலோகத்தைக் கரைத்து தொடர்ந்து கரைசலை ஆவியாக்குதல் மூலம் உற்பத்தி செய்யலாம்.[1][2][3]
- In + 4 HNO3 → In(NO3)3 + NO + 2 H2O
நீரேற்று முதலில் அடிப்படை உப்பாகவும் பின்னர் 240 ° செல்சியசு வெப்பநிலையில் இண்டியம்(III) ஆக்சைடாகவும் சிதைகிறது. நீரற்ற இண்டியம்(III) நைட்ரேட்டு சேர்மமானது இண்டியம்(III) குளோரைடு மற்றும் இருநைட்ரசன் பெண்டாக்சைடு ஆகியவை வினைபுரிவதால் உற்பத்தி செய்யப்படுகிறது.[2][4]
அதிகப்படியான நைட்ரேட்டு அயனிகளின் முன்னிலையில், இண்டியம்(III) நைட்ரேட்டு [In(NO3)4]- அயனியாக மாறுகிறது.[1][2]
இண்டியம்(III) நைட்ரேட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு இண்டியம்(III) ஐதராக்சைடை அளிக்கிறது. இது சோடியம் டங்சுடேட்டுடன் வினைபுரிந்து காரக்காடித்தன்மைக்கேற்ப In(OH)WO4, [In(OH)2]2WO4, NaInWO4 அல்லது In2(WO4)3 சேர்மமாக உருவாகிறது.[5][6]
Remove ads
கட்டமைப்பு
இண்டியம்(III) நைட்ரேட்டின் ஐந்து நீரேற்று மட்டுமே கட்டமைப்பு ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஐந்து நீரேற்றில் எண்முக [In(NO3)(H2O)5]2+ அயனிகளையும் இரண்டு நைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் இச்சேர்மம் படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads