இது நிஜமா

From Wikipedia, the free encyclopedia

இது நிஜமா
Remove ads

இது நிஜமா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ண கோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வி. சீதாராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் இது நிஜமா, இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

இத்திரைப்படத்தின் கதை 1945 இல் ஆங்கிலத்தில் வெளியான வொண்டர் மேன் என்ற திரைப்படக் கதையின் தழுவலாகும். திரைக்கதையை எஸ். பாலச்சந்தரும், வசனங்களை வி. சீதாராமனும் எழுதியிருந்தனர்.[1]

மாதுவும் கோபாலும் ஒரே சாயல் கொண்ட இரட்டைக் குழந்தைகள் (எஸ். பாலச்சந்தர்). கோபால் இசைக் கருவிகள் விற்பனையாளர். மற்றவன் மாது இலண்டன் சென்று படிக்கிறான். அத்துடன் நடனக் குழுவிலும் சேர்ந்து கொள்கிறான். வீணை திருத்துவதற்காக கடைக்கு வந்த நளினி கோபாலைக் காதலிக்கிறாள். இலண்டனில் இந்திய சங்க நிதிக்காக மாது ஒரு நடன நிகழ்ச்சி நடத்துகிறான். அதில் நடனமாடிய நிர்மலா மாதுவைக் காதலிக்கிறாள். நிர்மலாவைக் காதலித்து வந்த சண்முகம் பொறாமையால் மாதுவைக் கொலை செய்கிறான்.ஆனால், மாதுவின் ஆவி சண்முகத்தைப் பழி வாங்க உறுதி கொண்டு அவனையே சுற்றி வருகிறது. மாது கொலை செய்யப்பட்டதை அறியாத நிர்மலா அவனைத் தேடி இந்தியா வருகிறாள். சண்முகமும் அவளைப் பின்தொடருகிறான்.[2]

சென்னையில் மாதுவின் ஆவி கோபாலிடம் உண்மையைக் கூறுகிறது. உணவு விடுதி ஒன்றில் கோபாலைச் சந்தித்த நிர்மலா அவனை மாது என நினைக்கிறாள். இதனால் நளினிக்கு கோபால் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இறுதியில் சண்முகம் தான் காதலித்த நிர்மலாவையே சுட்டுக் கொன்று விட்டு, காவலரிடம் பிடிபட்டு இறக்கிறான். நிர்மலாவின் ஆவியும், மாதுவின் ஆவியும் உல்லாசமாக வான வீதியில் செல்கின்றன. கோபால் - நளினி திருமணம் இனிதே நிறைவேறுகிறது.[2]

Remove ads

நடிகர்கள்

  • எஸ். பாலச்சந்தர் (மாது. கோபால்)
  • சரோஜினி (நளினி)
  • என். ராஜம் (நிர்மலா)
  • சீதாராமன் (டாக்டர் சுதர்சனம்)
  • கடக்கர்
  • ரங்கூன் ராஜம்மா
  • ஏ. எஸ். நாகராஜன்

வேறு தகவல்கள்

இப்படத்தின் கதாநாயகியாக நடித்த சரோஜினி ஐராவதி 1947 இல் வெளிவந்த ருக்மாங்கதனில் நடித்திருக்கிறார்.[2] சிற்பியின் காதல் என்ற நடனக் காட்சியையும் இத்திரைப்படத்தில் இணைத்திருக்கிறார்கள்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads