இதோம்

மலை From Wikipedia, the free encyclopedia

இதோம்
Remove ads

இதோம் மலை (Mount Ithome) என்பது கிரேக்கத்தின் மெசேனியாவில் உள்ள இரட்டை சிகரங்களில் வடக்கே உள்ள ஒரு மலையாகும். இதோம் மலை சுமார் 800 மீட்டர்கள் (2,600 அடிகள்), 760 மீட்டர்கள் (2,490 அடிகள்) வரை உயர்ந்து காணப்படுகிறது. அருகில் உள்ள மற்றொரு சிகரமான ஈவா மலை ( கிரேக்கம்: Εύα ), 700 மீட்டர்கள் (2,300 அடிகள்) உயரம் கொண்டது. அது இதோமி மலையுன் 0.80 கிலோமீட்டர்கள் (0.50 மைல்கள்) நீளமுள்ள மெல்லிய மேட்டினால் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் Ithome, Ithomi, உயர்ந்த புள்ளி ...

இதோம் மலையானது மெசேனியா வளைகுடாவில் உள்ள கலாமாதா நகரத்துக்கு வடக்கே 25 கிலோமீட்டர்கள் (16 மைல்கள்) தொலைவிலும், பைலோசுக்கு கிழக்கே 60 கிலோமீட்டர்கள் (37 மைல்கள்) தொலைவிலும், வெண்கலக் கால மெசேனியாவின் தலைநகரான மெஸ்சினிக்கு வடக்கே 20 கிலோமீட்டர்கள் (12 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. மலை மேலிருந்து பாமிசோஸ் ஆற்றின் முழு பள்ளத்தாக்கையும், கிழக்கு நோக்கி டெய்கெட்டஸ் மலை வரையும், தெற்கே மெசேனியா வளைகுடா வரையும் காண இயலும்.

Remove ads

சொற்பிறப்பியல்

இதோம்

பெரும்பாலான பண்டைய பெயர்களைப் போலவே இதோமின் சொற்பிறப்பியல் குறித்து உறுதியாக எதுவம் தெரியவில்லை. இது தெசலியில் உள்ள ஒரு நகரத்தின் பெயராகும், இருப்பினும் தெசலியில் உள்ள நகரம் முதலில் தோம் என்று அழைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளை ரீஸ் குறிப்பிடுகிறார்.

நிலவியல்

Thumb
மவ்ரோமதியில் உள்ள கிளெப்சிட்ராவின் பின்னனணியில் இதோம் மலை காணப்படுகிறது.
Thumb
இதோம் மலையின் பின்னணியில் மெஸ்சீனின் சுவர்கள்.

ஹோமெரிக் சிற்றூரான இதோம் இந்த மலையின் உச்சியில் தட்டையான பகுதியில் இருந்திருக்கலாம். வெண்கல காலத்தில், ஜீயஸ் இதோமடாசுக்கு (ஜீயஸ் ஆஃப் இதோம்) கட்டபட்ட ஒரு கோவில் இருந்தது. [1] 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இக்கோயில் இடிக்கபட்டு அதன் கற்களைக் கொண்டு ஒரு கிறிஸ்தவ தேவாலயமும், மடாலயமாக கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில், பனகியா வோல்கனோ அல்லது மோனி வோல்கனோவின் மடாலயம் மூடப்பட்டது. அது பழைய மடாலயம் என்று அறியப்பட்டது. புதிய மடாலயம் ஈவாவின் கீழ் கிழக்கு சரிவில் கட்டப்பட்டது. இது பழங்கால கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நூலகத்தையும் கொண்டுள்ளது. இதோம் என்ற பாரம்பரிய நகரம் இதோம் மலையின் கீழ் மேற்குப் பகுதியில் இருந்தது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads