இத்தாலி இராச்சியம் (Kingdom of Italy, இத்தாலியம்:Regno d'Italia) என்பது சாடினிய அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் அரசராக அறிவிக்கப்பட்டதும் 1861 இல் உருவாக்கப்பட்ட அரசாகும்.[1] இந்த அரசு இத்தாலிய ஐக்கியத்தின் விளைவாக சாடினிய இராச்சியத்தின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த சாடினிய இராச்சியம் இதற்கு முன்னோடி அரசாகக் கருதப்படலாம். 1943 இல் இத்தாலி ஆட்சிமுறை மாற்றத்திற்கு உள்ளானது. இதன் மூலம் பாசிச தலைமைத்தும் நீக்கப்பட்டு சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி சிறையிடப்பட்டு, உள்ளூர், தேசிய மட்டங்களில் அரசாங்கத்தின் பாசிச முறை ஒழிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் இத்தாலி இராச்சியம்Regno d'Italia, தலைநகரம் ...
இத்தாலி இராச்சியம்
Regno d'Italia
1861–1946
கொடி
குறிக்கோள்:Foedere et Religione Tenemur
நாட்டுப்பண்:Marcia Reale d'Ordinanza Royal மார்ச்சு of Ordinance