இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India), ஒரு லாப நோக்கமற்ற பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அமைப்பாகும்.[1][2] இந்த அமைப்ப்பின் நோக்கம் "பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் தலையங்கத் தலைமையின் தரத்தை உயர்த்துவதாகும். இது 1978ல் குல்தீப் நய்யார்[3] எனும் பத்திரிகை ஆசிரியரால் நிறுவப்பட்டது.[4][5] இந்தியப் பத்திரிகைகள் சார்பாக இந்த அமைப்பு இந்திய அரசிடம் தொடர்பு கொள்கிறது.[6]
இது பத்திரிக்கைத் தொழிலாளர் சங்கம் போன்று செயல்படாத இவ்வமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உள்ளது. பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களை அரசுக்கு தெரியப்படுத்தி பாதுகாப்பு கோருகிறது.[7][8][9]
Remove ads
அண்மைய செயற்பாடுகள்
சமூக வலைதளங்களில் இந்திய அரசு தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளின் உண்மை தன்மையை அறிவதற்கான, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி மத்திய அரசு தொடர்பாக பகிரப்படும் செய்திகளில் போலியான, உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையைக் கண்டறியும் அதிகாரத்தை பத்திரிகை தகவல் பணியகத்திற்கு[10] அதிகாரம் அளித்துள்ளது. இதனை இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நடுவண் அரசும் புதிய அமைப்பை செயல்படுத்தும் நடவடிக்கையை சூலை 10 வரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.[11][12]
Remove ads
வெளியீடுகள்
- Patel, Aakar; Padgaonkar, Dileep; Verghese, B. G. (2002). Rights and Wrongs: Ordeal by Fire in the Killing Fields of Gujarat : Editors Guild Fact Finding Mission Report. Editors Guild of India.[13]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads