இந்தியப் பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளை

இந்திய இலாப நோக்கற்ற அமைப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளை (Film Heritage Foundation) என்பது இந்தியாவின், மும்பையை தளமாக கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது திரைப்படச் சுருள் பாதுகாப்பு, மறு பிரதியாக்கம், இந்தியாவின் பாரம்பரியத் திரைப்படங்களை காப்பகப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கபட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவனர் ...
Remove ads

வரலாறு

பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளையானது 2014 இல் சிவேந்திர சிங் துங்கர்பூர் என்பவரால் நிறுவப்பட்டது.[2][3]

2015 ஏப்ரலில் சிட்னியில் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட ஆவணக் காப்பகங்களின் (எப்.ஐ.ஏ.எப்) பொதுச் சபையில் செயற்குழுவால் அதன் இணை உறுப்பினராக பாரம்பரித் திரைப்பட அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் நிறுவன இயக்குநரான சிவேந்திர சிங் துங்கர்பூர் எப்.ஐ.ஏ.எப்-இன் செயற்குழு உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]

பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளையின் செயல்பாடுகளாக திரைப்படங்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல், ஆவணக் காப்பகப் பணியை செய்தல், திரைப்பட மறு பிரதியாக்கம், பயிற்சியளித்தல், கல்வி, சேகரிக்கவேண்டிய திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்தல், மக்கள் தொடர்பாடல், பரப்புரை உள்ளிட்ட திரைப்படப் பாதுகாப்பு தொடர்பான முழு பணிகளையும் உள்ளடக்கியது. பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளையின் முக்கிய நடவடிக்கைகளில் செல்லுலாய்டு மற்றும் எண்ணிம படங்கள், திரைப்படம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாத்தல் போன்வை அடங்கும்.[5][6]

அறக்கட்டளையின் முதன்மை நோக்கமாக படங்கள், திரைப்படம் தொடர்பான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் இரண்டு செயல்கள் உள்ளன.[7][8] 2015 ஆம் ஆண்டில், அறக்கட்டளையானது தங்களது திரைப்பட பாதுகாப்புப் பணி மற்றும் மறு பிரதியாக்கப் பட்டறை போன்றவற்றிற்காக வணிகர்கள், பாலிவுட் நடிகர்கள் போன்றோரிடம் நிதி திரட்டியது.[9]

இந்த அறக்கட்டளை கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களையும் நடத்துகிறது. நாடு முழுவதும் பழையத் திரைப்படங்களைப் பாதுகாத்தல் மற்றும் மறு பிரதியாக்கம் குறித்த பயிற்சிப் பட்டறைகளை தோடர்ந்து நடத்துகிறது.[10] 2019 ஆம் ஆண்டில், அறக்கட்டளையானது இந்திய நடிகரான ராஜ் கபூரின் நினைவுப் பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பெற்றது.[11] இந்த அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டில் வாய்வழி வரலாற்றுத் திட்டத்தைத் துவக்கியது. அதில் நிரந்தர வரலாற்று மற்றும் கலாச்சார பதிவுக்காக, இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்பட ஆளுமைகளில் சிலரான அடூர் கோபாலகிருஷ்ணன், புத்ததேப் தாஸ்குப்தா, மணிரத்னம், அமிதாப் பச்சன், சௌமித்திர சாட்டர்ஜி, கௌதம் கோஸ் மற்றும் அபர்ணா சென் ஆகியோரை நேர்காணல் செய்தது.[12][13] டாடா அறக்கட்டளை 2017 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு மானியத்துடன் இவர்களின் வருடாந்திர திரைப்பட பாதுகாப்பு மற்றும் மறு பிரதியாக்கம், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கியது.[14]

2015 இல், மார்ட்டின் ஸ்கோர்செசியின் திரைப்பட அறக்கட்டளை மும்பையில் பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளையின் முதல் திரைப்பட பாதுகாப்பு மற்றும் மறுப் பிரதியாக்கப் பட்டறைக்கு தங்கள் உதவியை அளித்தது.[15][16]

பத்தாண்டுகளாக இந்தியாவின் பாரம்பரித் திரைப்படங்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதில் அறக்கட்டளையின் பணியைக் கொண்டாடும் வகையில், மும்பை வி.டி. இல் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் (GPO) 14, சூன், 2024 அன்று நடந்த விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சலட்டை மற்றும் நீக்க முத்திரையை ஆகியவற்றை வெளியிட்டது. அந்த நிகழ்வுக்கு புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளி சியாம் பெனகல், கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைப்படப் படைப்பாளி குல்சார், மகாராட்டிர மற்றும் மும்பை தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். மும்பையின் அஞ்சல்தலை பணியகத்தில் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் (ஜிபிஓ) இந்த சிறப்பு அஞ்சல் அட்டை விற்ப்பனை செய்யபட்டது.[17][18]

Remove ads

ஆவணக் காப்பகப்பணி

திரைப்படச் சேகரிப்பு

அறக்கட்டளையின் சேகரிப்பில் தற்போது நாட்டின் அனைத்துப் பிரிந்தியங்களிலிருந்தும் சேகரிக்கபட்ட பழமையான 35 மிமீ, 16 மிமீ, சூப்பர் 8 மற்றும் 8 மிமீ வடிவங்களில் சுமார் 500 சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. திரைப்படங்களைத் தவிர, 1930 கள் மற்றும் 40 களைச் சேர்ந்த முக்கியமான வரலாற்றுக் காட்சிகள், விடுதலை இயக்கத்தின் காட்சிகள், விடுதலைக்கு முந்தைய காலத்திய அரிய வீட்டுத் திரைப்படங்கள் போன்றவை குளிர்பதன வசதிகொண்ட சேமிப்பகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் அமிதாப் பச்சன், சியாம் பெனகல், மணி ரத்னம், விஷால் பரத்வாஜ், குமார் ஷஹானி, ஃபர்ஹான், சோயா அக்தர், கோவிந்த் நிஹலானி, என்.என். சிப்பி, புத்ததேப் தாஸ்குப்தா, கௌதம் கோஸ், பீம்சைன், குரானா, சித்ரா பாலேகர், ஓனிர், ஷாத் அலி, சுமித்ரா பாவே, சுனில் சுக்தங்கர் போன்ற முன்னணி திரைப்பட பிரமுகர்களின் படங்களும் உள்ளன.[19]

திரைப்படம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் காப்பகம்

திரைப்பட சுவரொட்டிகள், ஒளிப்படங்கள், எழுத்தாக்கங்கள், லாபி கார்டுகள், பாடல் கையேடுகள், பிரபல திரைப்பட ஆளுமைகளின் கலைப்பொருட்கள் போன்ற திரைப்படம் தொடர்பான நினைவுச் சின்னங்களையும் இந்த அறக்கட்டளை பாதுகாக்கிறது.[20]

ஏ.ஆர். கர்தார், சோராப் மோடி, ராஜ் கபூர், கிதார் சர்மா, சயீத் மிர்சா, ஷியாம் பெனகல், ஜி. அரவிந்தன், வி.கே. மூர்த்தி, சாஹிர் லூதியான்வி, சாதனா, ஜேபிஎச் வாடியா, புத்ததேவ் தாஸ்குப்தா, கிரிஷ் காசரவல்லி, பிலிம் நியூஸ் ஆனந்தன், கௌதம் கோஸ், கோவிந்த் நிஹலானி, ஜமுனா ஜே, குந்தன் ஷா, அருணா ராஜே, ஆஷிம் அலுவாலியா, பிரான் மற்றும் அனைத்து பிராந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பலரின் கலைப் பொருட்கள் இந்த சேகரிப்பில் உள்ளன.[21][22]

இந்த சேகரிப்பில் 30,000 ஒளிப்படங்கள், 10,000 ஒளிப்பட நெகட்டிவ்கள், 15,000 சுவரொட்டிகள், 10,000 லாபி அட்டைகள், 15,000 செய்தித்தாள் கட்டுரைகள், 6000 பாடல் கையேடுகள் மற்றும் ஏராளமான 3-டி பொருள்கள் உள்ளன.[23]

Remove ads

வாய்வழி வரலாறு திட்டம்

பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளை ஆஸ்கார் விருதுக்காக அறியப்பட்ட அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உடன் இணைந்து, சர்வதேச முறைகளைப் பின்பற்றி ஒரு முன்னோடி திட்டமாக இந்தியாவில் திரைப்பட பாரம்பரியத்திற்கான வாய்வழி வரலாற்றின் காட்சி வரலாற்று திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இசையமைப்பாளர்கள் வரை - என திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பலரின் ஒலி மற்றும் காணொளி நேர்காணல்களை பதிவு செய்வது, சேகரிப்பது மற்றும் பாதுகாக்கும் பிணியை மேற்கொண்டு வருகிறது.[24]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads