இந்தியப் புள்ளியியல் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியப் புள்ளியியல் கழகம் (Indian Statistical Institute (ISI)) 1959 ஆம் ஆண்டு இந்திய நாடாளும் மன்றத்தால் நாட்டின் முதன்மைச் சிறப்பான கல்விக் கழகங்களுள் ஒன்றாக அறிவித்தது[1]. கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் முன்னர் புள்ளியியல் செய்களச்சாலை ஒன்றை பிரசந்தா சந்திரா மகாலனோபிசு நிறுவி இருந்தார், அதின் வளர்ச்சியாகவே இந்தப் புள்ளியியல் கழகம் தோன்றியது. இது 1931 ஆம் ஆண்டிலேயே பொது பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இதன் புகழால், இதை அடிப்படை மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவின் வட காரோலினாவில் 'ரிசர்ச்சு டிரையாங்கிள்' (Research Triangle, ஆய்வு முக்கோணம்) என்னும் ஆய்வுகநகரத்தில் அமெரிக்காவின் முதல் அமெரிக்கப் புள்ளியியல் கழகம் செர்ட்ரூடு மேரி காஃக்சு (Gertrude Mary Cox) என்பவரால் நிறுவப்பட்டது [2]

இந்தியப் புள்ளியியல் கழகத்தை (இ.பு.க) கொல்கத்தாவில் நிறுவியவர் பிரசந்தா சந்திரா மகாலனோபிசு ஆவர். இவர் இரபீந்தரநாத்து தாகூர், பிரச்சேந்திரனாத்து சீல் ஆகியோரது வழிகாட்டுதலாலும் அறிவுரையாலும் உந்தப்பட்டார். அவருடைய தலைமையில் புள்ளியியல் கருத்துகளை அறிவியல் துறைக்கும், மாந்த வாழ்வியல் அறிவுத்துறைகளுக்கும் பயன்படுத்தி வளர்த்தெடுத்தனர். இதன் பயனாய் புள்ளியியல் துறையும் வளர்ந்தது. இக் கல்விக் கழகம் புள்ளியியல் சார்ந்த ஆய்விலும் அதன் பயன்பாட்டுத்துறை ஆய்விலும் முன்னணி நிறுவனமாக நன்கு அறியப்பட்டதாக இருந்தது.
இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைமையகம், கொல்கத்தாவின் பராநகர் பகுதியில் அமைந்துள்ளது. கல்வி சார்ந்த துறைகள் நான்கு துணை நடுவங்களாக விரிவடைந்து உள்ளன. தில்லி, பெங்களூரு, சென்னை, தேஜ்பூர் மற்றும் கிரீடிக் நகரங்களில் இதன் கிளைகள் உள்ளது
Remove ads
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
