இந்தியாவின் செம்மொழிகள்

இந்திய குடியரசின் செம்மொழிகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய அரசானது ஆறு மொழிகளை இந்தியாவின் செம்மொழிகளாக அறிவித்துள்ளது, 2004 ஆம் ஆண்டில் சில கட்டுப்பாடான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மொழிகளுக்கு இந்தியாவின் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்படலாம் என அறிவித்தது. இது மொழியியல் நிபுணர்கள் குழுவுடன் கலாச்சார அமைச்சகத்தால் நிறுவப்பட்டது[1]. செம்மொழிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யவும், செம்மொழிகளை வகைப்படுத்தவும் இந்திய அரசால் இக்குழு அமைக்கப்பட்டது.

செம்மொழிகள்

இந்தியச் செம்மொழிகளின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் மொழிகள், அங்கீகார ஆண்டு ...

அளவுகோல்கள்

2004 ஆம் ஆண்டில் செம்மொழிக்கான வயது சுமார் 1000 ஆண்டுகள் என இருந்தது.[13]

2006 ஆம் ஆண்டு செய்திக்குறிப்பில், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் அம்பிகா சோனி ராஜ்யசபாவில் "செம்மொழி" என வகைப்படுத்துவதற்கு பரிசீலிக்கப்படும் மொழிகளின் தகுதியை தீர்மானிக்க பின்வரும் அளவுகோல்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.[14]

1500 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகள் ஆரம்பகால நூல்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தொன்மை கொண்டதினாய் இருத்தல்,பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பு, இது அம்மொழியை பேசும் தலைமுறைகளால் மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படுவது;இலக்கியப் பாரம்பரியம் உண்மையானதாய் இருத்தல்,மற்ற பேச்சு சமூகத்திலிருந்து கடனாக பெறப்படாதிருத்தல்;செம்மொழி மற்றும் இலக்கியம் நவீனத்திலிருந்து வேற்பட்டதாக இருப்பதால்,செம்மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களும் அல்லது அதன் கிளைகளுக்கும் இடையில் ஒரு இடைநிறுத்தம் இருக்கலாம்.[15]

Remove ads

நன்மைகள்

நவம்பர் 1,200 தேதியிடப்பட்ட இந்திய அரசின் தீர்மானம் எண்.2-16/2004 இன் படி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

  1. இந்திய செம்மொழிகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இரு முக்கிய சர்வதேச விருதுகள் வழங்கப்படுகிறது.
  2. செம்மொழிகளின் சிறந்த ஆய்வுக்காக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  3. இந்திய செம்மொழிகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்காக, குறைந்தபட்சம் மத்தியப் பல்கலைக்கழகங்களிலாவது, செம்மொழிகளுக்கான ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழில்சார் இருக்கைகளை உருவாக்க, பல்கலைக்கழக மானியக் குழுவிடம் கோரப்படும்.[16]

பிற மொழிகளுக்கான கோரிக்கைகள்

அடுத்த சில ஆண்டுகளில், பாலி,[17] பெங்காலி,[18][19] மராத்தி[20][21] மற்றும் மெய்டேய் (அதிகாரப்பூர்வமாக மணிப்பூரி என்று அழைக்கப்படுகிறது) உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[22][23][24]

2024ல் செம்மொழி தகுதி பெற்ற மொழிகள்

அக்டோபர் 2024ல் இந்தியப் பண்பாட்டு அமைச்சகம் பாளி மொழி, பிராகிருத மொழி, மராத்திய மொழி, ஒடியா மொழி, வங்காள மொழி என 5 மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கியது.[25]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads