இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு (mily planning in India) என்பது பெரும்பாலும் இந்திய அரசாங்கத்தால் மக்கட் தொகையினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட முயற்சிகளை அடிபபடையாகக் கொண்டது. 1965 முதல் 2009 வரை, கருத்தடை பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. 1970 ல் திருமணமான பெண்களின் கருத்தடை விகிதம் 13% லிருந்து 2009 இல் 48% ஆக அதிகரித்தது. மேலும், கருவுறுதல் விகிதம் பாதியாக குறைந்துள்ளது. 1966 ல் 5.7 ஆக இருந்தது 2012 ல் 2.4 ஆக குறைந்தது, ஆனால் தேசிய கருவுறுதல் விகிதம் அதிகமாகவே உள்ளது. இந்தியா ஒவ்வொரு 20 நாட்களுக்கும் 1,000,000 மக்களை அதன் மக்கள் தொகையில் சேர்க்கிறது. [1] [2] [3] [4] [5] இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் திட்டமிடப்பட்ட இரண்டு பில்லியன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விரிவான குடும்பக் கட்டுப்பாடு முன்னுரிமைத் திட்டமாக உள்ளது.
2016 இல், மொத்த கருவள வீதம் இந்தியாவில் பெண் ஒன்றுக்கு 2.30 என இருந்தது [6] கருக்கலைப்பு வீதமானது 1000 பெண்களில் 47.0 சதவீதமாக உள்ளது. [7] அதிக கருக்கலைப்பு விகிதங்கள் 15-49 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது.1000 பெண்களுகளில் 70.1 சதவீதமாக கருக்கலைப்பு வீதம் உள்ளது.[7] ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நிகழும் கருக்கலைப்புகள் கருத்தரிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு ஏற்படுகின்றன.இதில் பகுதியானது திட்டமிடப்படாத சூழ்நிலையில் ஏற்படுகிறது.[8] பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவதால், டெமாகிராபிக்ஸ் டிரான்சிசன் மாடல் என்பதில் இந்தியா மூன்றாவது நிலையில் உள்ளது. [9] 2026 இல், மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 ஐ அடைந்தவுடன் இந்தியா நான்காவது நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. [9]
இந்தியாவில் பெண்கள் கருத்தடை பயன்பாடு மற்றும் அவர்கள் உடலில் என்னென்ன பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. [10] இந்தியாவில் கருத்தடை பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 1970 இல், 13% திருமணமான பெண்கள் நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினர், இது 1997 க்குள் 35% ஆகவும் 2009 இல் 48% ஆகவும் உயர்ந்தது.
பொதுவாக இந்தியாவில் திருமணமான பெண்களிடையே கருத்தடை பற்றிய விழிப்புணர்வு பரவலாக அதிகமாக உள்ளது. [11] இருப்பினும், பெரும்பாலான திருமணமான இந்தியர்கள் (2009% ஆய்வில் 76%) கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடுப்பதில் குறிப்பிடத்தக்க சிக்கல்களைச் சந்திப்பதாக புகாரளித்தனர். [12] இந்தியாவில் உள்ள மக்களுக்கு கருத்தடை கிடைப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. 2009 இல், 48.4% திருமணமான பெண்கள் கருத்தடை முறையைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டது. [12] அனைத்து இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மேகாலயா, கருத்தடை பயன்பாட்டில் 20%, கடைசி இடத்தில் உள்ளது. குறைவாக இருந்தது. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் 30%க்கும் குகுறைவான கருத்தடை பயன்பாட்டினைக் கொண்டுள்ளன. [12] கருத்தடை செய்வது இந்தியாவில் ஒரு பொதுவான நடைமுறை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கருத்தடை செய்ய முகாம்களைப் பயன்படுத்துவது என்பது பொதுவான நடைமுறையாக இந்தியாவில் உள்ளது.
ஆய்வுகளின் முடிவுகள், அதிகரித்த பெண் கல்வியறிவு வீதம், கருத்தடை செய்வதில் வலுவான தொடர்புடையது என்பதைக் குறிக்கிறது. [13] பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லையென்றாலும், பெண் கல்வியறிவு சுயாதீன முடிவுகள் எடுப்பதற்கு பெரிதும் உதவுவதாக அந்த ஆய்வுகள் கூறுகிறது. [14] இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு நிலைகள் மக்கள்தொகை நிலைப்படுத்தலுக்கு உதவும் முதன்மை காரணியாக இருக்கலாம், ஆனால் அவை ஒப்பீட்டளவில் அதன் மேம்பாடு மெதுவாக நடைபெறுகிறது. 1990 ஆய்வில், இந்தியா தற்போதைய முன்னேற்ற விகிதத்தில் சென்றால் உலகளாவிய கல்வியறிவை அடைய 2060 வரை ஆகும் என்று மதிப்பிடப்பட்டது. [13]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads