இந்திய உயர் நீதிமன்றங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன்படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள்' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன.

வரையறை

உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமையியல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

தண்டனை அதிகாரம்

உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும்.

விசாரணை அதிகாரம்

கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-இன்படி விசாரணை செய்யும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214-இன்படி நிறுவப்பட்டுள்ளன.

Remove ads

அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்

Thumb
மும்பையிலுள்ள பாம்பே உயர் நீதிமன்றம்

ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கப்படும். இவை மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.

உரிமை இயல்(சமூக நல) வழக்குகள் மாவட்ட நீதிபதியால் மேற்கொள்ளப்படும் . குற்றவியல் வழக்குகளை அமர்வு நீதிபதி மேற்கொள்வார். அமர்வு நீதிபதியே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரத்தில் உள்ள நீதிபதியாவார்.

உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

உயர் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்குகின்றன. இவர்களின் பதவிப்படி நிலை மாநிலத்திற்குள்ளே #14 என்றும் மாநிலத்திற்கு #17 என்றும் வழங்கப்பெற்று அழைக்கப்படுகின்றனர்.

நீதிபதிகளின் எண்ணிக்கை

இதர நீதிபதிகளின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தேசிய சராசரி சதவிகிதம் கணக்கிட்டு அதன்படி நீதிபதிகளின் எண்ணிக்கைக் கூட்டவோக் குறைக்கவோப் படுகின்றது.

பழமையானது

இந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே. இது நிர்மானிக்கப்பட்டது 1862.

சுற்று அமர்வு

அமர்வு நீதிமன்றங்களும் மாநில, வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சிறிய மாநிலங்களில் சுழற்சி அ சுற்று அமர்வு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. இவை சுழற்சி அ சுற்று நீதிமன்றங்கள் எனப்படுகின்றது.

Remove ads

உயர் நீதிமன்றங்கள்

உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் வரிசைப்படி/ யூனியன் பிரதேசங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads