இந்திய ஒலிம்பிக் சங்கம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்யும் அமைப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பிற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கும் இந்திய விளையாட்டு வீரர்களை தெரிவுசெய்யும் பொறுப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்குரியது. இந்தச் சங்கம் 1927 ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றது.

2008 ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக்கு முன்னர் இந்தியா மொத்தம் 8 தங்கப் பதக்கங்களை மட்டும், அவை அனைத்தும் வளைதடி விளையாட்டில் மட்டுமே, பெற்றிருந்தது. 2004 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே பெற்றது. 2008 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் பெற்று முதன்முதலாக இத்தகையச் சாதனையை நிகழ்த்தியவரானார்.

ஏறக்குறைய உலகின் 1/6 மக்களைக் கொண்டிருக்கும் இந்தியா, ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டும் பெற்றது இந்திய ஒலிம்பிக் சங்கம் அதன் கடமையை சரியாகச் செய்யவில்லை என்ற விமர்சனத்துக்கு உட்படித்தியது [மேற்கோள் தேவை]. விளையாட்டு வீரர்களை சரியாக அடையாளம் கண்டு, தகுந்த பயிற்சியும் ஊக்கமும் கொடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் தவறிவிட்டது என்றும் இதன் மீது பொதுக் குற்றச்சாட்டுக்கள் உண்டு[மேற்கோள் தேவை].

Remove ads

தடை

கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற ஒலிம்பிக் சாசனப்படி[1] நிர்வாகிகள் தேர்தலை நடத்தாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஓ.ஏ.) 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) தடை விதித்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகம் மாற்றம் அடைந்த ஓரு வாரத்தில் இந்த 14 மாத தடையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நீக்கியது.[2]

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads