இந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான் (இ.தொ.க. இராசத்தான், Indian Institute of Technology Rajasthan ) இராசத்தான் மாநிலத்தில் இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
2008ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் இ.தொ.க. கான்பூர் வளாகத்தில் துவங்கியது. இ.தொ.க.கான்பூர் இக்கழகத்தின் வழிகாட்டியாக செயல்படுமென தெரிவிக்கப்பட்டது. ஜோத்பூர் அருகே அமைய வாய்ப்புள்ள நிரந்தர வளாகத்திற்கான இடம் பேராசிரியர் விசய் சங்கர் வியாசு தலைமையிலான உயர்மட்டக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டு நடுவண் அரசால் முடிவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.
Remove ads
கல்வித் திட்டங்கள்
தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்கியது:
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் பொறியியல்
- எந்திரப் பொறியியல்
ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேர்ந்தனர்.
இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித் திட்டங்களும் ஆய்வுத் திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads