இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்

From Wikipedia, the free encyclopedia

இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
Remove ads

22°19′10.97″N 87°18′35.87″E

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, நிறுவியது ...

இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (இ.தொ.க. கரக்பூர்,Indian Institute of Technology, Kharagpur, IIT KGP) 1951 ஆம் ஆண்டு இந்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கழகம் பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட, பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் முதலாவதாக நிறுவப்பட்டது. இ.தொ.க கரக்பூர் அறிவியல் மற்றும் நுட்பத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.[1]

Remove ads

வரலாறு

Thumb
இ.தொ.க கரக்பூரின் முதன்மை கட்டிடம்

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதலாவதான இக்கழகம் 1950 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் எஸ்பிளனேட் கிழக்குபகுதியில் நிறுவப்பட்டது. ஆகஸ்ட் 1951 ஆம் ஆண்டு கொலகொத்தாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஃகிஜிலி,கரக்பூருக்கு இடம் பெயர்ந்தது. வகுப்பு அறைகள்,சோதனைக்கூடங்கள் மற்றும் ஆட்சிப்பொறுப்புகள் அலுவலகம் ஆங்கிலேயர் அரசியல் கைதிகளை சிறைவைத்து சித்திரவதை செய்த ஃகிஜிலி தடுப்புக்காவல் முகாம் (தற்போது சஃகித் பவன்) இருந்த கட்டிடத்தில் இயங்கின. இக்கழகத்திற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் "Indian Institute of Technology" என மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரிட்டார். இந்திய நாடாளுமன்றம் 15 செப்டம்பர் 1956 அன்று தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக சட்டம் இயற்றியது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads