இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நிதிசார் முறைமை குறியீடு (Indian Financial System Code, IFS Code) இந்தியாவின் முதன்மையான இரு மின்னணு பணப் பரிவர்த்தனை அமைப்புகளான நிகழ்நேர பெருந்திரள் தீர்வு மற்றும் தேசிய மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளில் பங்கேற்கும் வங்கிக் கிளையை அடையாளம் காணும் எண்ணெழுத்து குறியீடு ஆகும்.[1] 11 எழுத்துருக்கள் கொண்ட இந்தக் குறியீட்டின் முதல் நான்கு அகரவரிசை எழுத்துருக்கள் வங்கியின் பெயரையும் கடைசி ஆறு எழுத்துருக்கள் (வழமையாக எண்கள், எழுத்துக்களாகவும் இருக்கலாம்) வங்கிக் கிளையையும் குறிக்கின்றது. ஐந்தாவது எழுத்துருவாக தற்போது 0 (சுழியம்) உள்ளது; இது வருங்காலத் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடுகளைக் கொண்டே நிகழ்நேர பெருந்திரள் தீர்வு பரிமாற்றமும் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனையும் சேரவேண்டிய வங்கிக் கிளைக்கு தகவல்களை கொண்டு சேர்க்கின்றன.[2]
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வங்கி குறியீடு | 0 | கிளை குறியீடு |
Remove ads
குறியீடு தகவல்கள்
மின்னணு பணப் பரிமாற்றத்தில் பங்கேற்கும் அனைத்து வங்கிக் கிளைகளும் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் பட்டியலை வைத்துள்ளன. மேலும் இந்தப் பரிவர்த்தனைகளில் பங்கேற்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.[3] அனைத்து வங்கிக் கிளைகளும் தங்கள் கிளைக்கான குறியீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலைகளில் அச்சிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதனையும் காண்க
- தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை - ஆர்டிஜிஎஸ் & என்ஈஎஃப்டி அமைப்புகள்
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads